spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’தேசிய பாதுகாப்பு அகாடமி, கப்பல் அகாடமி ’395’ பேருக்கு வேலை..!’’ பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    ’’தேசிய பாதுகாப்பு அகாடமி, கப்பல் அகாடமி ’395’ பேருக்கு வேலை..!’’ பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கப்பல் அகாடமியில் காலியிடங்களை நிரப்பு வதற்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடம் 395 ஆகும். விண்ணப்பிக்க 06.06.2023 கடைசி நாள். பிளஸ் டூ முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள்.

    காலியிடம் : தேசிய பாதுகாப்பு அகாடமியில் -National Defence Academy தரைப்படை 208 (பெண்களுக்கு 10 இடங்கள்), கப்பல் படை 42 (பெண்களுக்கு 12 இடங்கள்), விமானப்படை 120 (பிளையிங் 92 (பெண்களுக்கு 2 இடங்கள்), கிரவுன்ட் டியூட்டி டெக்னிக்கல் 18 (பெண்களுக்கு 2 இடங்கள்), நான் டெக்னிக்கல் 10 (பெண்களுக்கு 2 இடங்கள்) கப்பல் அகாடமி Naval Academy (10+2 Cadet Entry Scheme) 25 (பெண்களுக்கு 7 இடங்கள்) என்று மொத்தம் 395 இடங்கள் உள்ளன.

    கல்வித் தகுதி : தரைப்படைக்கு பிளஸ் 2, மற்ற பிரிவுக்கு இயற்பியல், கணித பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

    வயது : 2.1.2005 – 1.1.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.

    தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உளவியல் திறன், நுண்ணறிவு தேர்வு. எழுத்துத்தேர்வு செப். 3இல் நடைபெற உள்ளது.

    தேர்வு மையம் : தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர்

    விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

    கடைசி நாள் : 06.06.2023

    விவரங்களுக்கு :www.upsc.gov.in

    இந்த வேலைக்கான முழு விபரத்தையும் https://www.upsc.gov.in/sites/default/files/Notif-NDA-II-23-engl-170523.pdf என்பதில் காணலாம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments