spot_img
More
    முகப்புகல்வி’’எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்பு..!’’ சேர்க்கை அறிவிப்பு வெளியானது

    ’’எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்பு..!’’ சேர்க்கை அறிவிப்பு வெளியானது

    எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கை குறித்த அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ளன. ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம். 

    2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டபடிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணாக்கர்கள் அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலைக் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக்கழக துறைகள் (Unversity Departments / வட்டடார மையங்கள் (Regional Centers / அண்ணாமலை பல்கலைக்கழகம் / சென்னை பல்கலைக்கழகம் / இதர பல்கலைக்கழகங்கள் / சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை: www.gct.ac.in www.tn.mbamca.com என்ற இணையத்தளங்கள் வாயிலாக தேவையான சான்றுகளுடன் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பத்தாரர்கள் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

    பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்தலாம்.

    இந்தக் கல்வி ஆண்டில் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு நடைமுறைகளான விண்ணப்பதிவு, சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி தேர்ந்தெடுத்தல், தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீடு ஆணைகள் ஆகியவை அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

    முக்கிய நாட்கள்: விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் 01.06.2023. முடியும் நாள் 25.06.2023.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments