spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா''தி.மு.க.வை மோடி­யும் – பா.ஜ.க.வின­ரும் குறி­வைக்­கி­றார்­கள்..!'' திருச்சி என்.சிவா

    ”தி.மு.க.வை மோடி­யும் – பா.ஜ.க.வின­ரும் குறி­வைக்­கி­றார்­கள்..!” திருச்சி என்.சிவா

    மாநில உரி­மை­க­ளைக் காப்­ப­தி­லும், எதிர்க்­கட்­சி­களை ஒருங்­கி­ணைப்­ப­தி­லும் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் முனைப்­பு­டன் செயல்­ப­டு­வ­தால் தி.மு.க.வை மோடி­யும் – பா.ஜ.க.வின­ரும் குறி­வைக்­கி­றார்­கள் என்று மாநி­லங்­க­ளவை கழ­கக் குழுத் தலை­வர் திருச்சி என்.சிவா செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்டி அளிக்­கை­யில் கடும் குற்­றச்­சாட்­டி­யுள்­ளார்.

    சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் மாநி­லங்­க­ளவை கழ­கக் குழுத் தலை­வர் திருச்சி சிவா, செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்டி வரு­மாறு:–

    மணிப்­பூர் விவ­கா­ரம் குறித்­தும், டெல்லி மாநில அர­சின் அதி­கா­ரத்­தைப் பறிக்­கும் சட்­டத்தை எதிர்த்­தும் நாடா­ளு­மன்­றத்­தில் தி.மு.க. குரல் எழுப்­பி­யது. மணிப்­பூர் விவ­கா­ரத்­தில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு மிகுந்த அலட்­சி­யத்­து­டன் நடந்து கொண்­டது, நாட்­டில் ஏற்­ப­டும் உயிர்­சே­தங்­க­ளுக்கு பதி­ல­ளிக்க வேண்­டி­யது பிர­த­ம­ரின் கடமை. மணிப்­பூர் விவ­கா­ரம் குறித்து எதிர்க்­கட்­சி­கள் எழுப்­பிய எந்­தக் கேள்­வி­க­ளுக்­கும் பிர­த­மர் மோடி பதி­ல­ளிக்­க­வில்லை.

    எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் இல்லை!

    அவை நிகழ்­வு­க­ளை­யெல்­லாம் ஒத்­தி­வைத்­து­விட்டு மணிப்­பூர் தொடர்­பாக பிர­த­மர் ஒரு அறிக்கை தர வேண்­டும். நாங்­கள் விவா­தத்­தில் வைத்­தி­ருக்­கின்ற கருத்­துக்­களை, எங்­கள் தரப்­பில் இருக்­கின்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பதில் சொல்ல வேண்­டும். இது­தான் நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கம் என்று சொன்­னோம். ஆனால், பிர­த­மர் அவைக்கு வர மறுத்­தார், மாறாக உள்­துறை அமைச்­சர வர வைக்­கி­றோம். நீங்­கள் இரண்­டரை மணி நேரம் குறு­கிய கால விவா­தம் எடுத்­துக்­கொள்­ளுங்­கள் என்­கி­றார்­கள். ஆனால், நாங்­கள் அதற்கு இசைவு தெரி­விக்­க­வில்லை, கார­ணம் பிர­த­மர் என்­ப­வர் இந்த நாட்­டின் உட்­ச­பட்ச பொறுப்­பில் இருப்­ப­வர், ஒரு பகு­தி­யில் ஒரு உயி­ருக்­குச் சேதம் என்­றால்­கூட பதற வேண்­டிய பொறுப்பு பிர­த­ம­ருக்கு உண்டு.

    பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் திறன் நம் முதல்வருக்கு உண்டு!

    நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தம் நடத்­தா­மல் முக்­கிய மசோ­தாக்­களை ஒன்­றிய அரசு நிறை­வேற்­றி­ யுள்­ளது. இது நாடா­ளு­மன்ற நடை­மு­றை­க­ளுக்கு எதி­ரா­னது. மாநில உரி­மை­க­ளைக் காப்­ப­தி­லும் எதிர்க்­கட்­சி­களை ஒருங்­கி­ணைப்­ப­தி­லும் முனைப்­பு­டன் செயல்­ப­டு­வ­தால் தி.மு.க.வை பிர­த­ம­ரும் பா.ஜ.க. வின­ரும் குறி­வைக்­கின்­ற­னர். இந்­தியா என்ற பெய­ரில் எதிர்க்­கட்­சி­கள் அமைத்­துள்ள கூட்­டணி ஒற்­று­மை­யா­க­வும் வலி­மை­யா­க­வும் உள்­ளது. தேர்­த­லுக்கு முன்பே சாணக்­கி­யத்­த­ன­மாக அர­சி­யல் செய்து எதிர்க்­கட்­சி­களை ஒன்று சேர்த்­த­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்­கட்­சி­களை ஒருங்­கி­ணைத்து, பா.ஜ.க.வை எதிர்­கொள்­ளும் திறன் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு உண்டு.

    நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் பேசி­ய­போ­து­கூட சன்­சத் தொலைக்­காட்சி காட்­ட­வில்லை. பிர­த­மர் மோடி பேசி­ய­போது எதிர்க்­கட்­சி­கள் தெரி­வித்த எதிர்ப்பை சன்­சத் தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்­ப­வில்லை. நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­கள் செய்­வது சரியா? தவறா? என்­பதை மக்­கள் முடிவு செய்­து­கொள்­ளட்­டும். மக்­க­ளவை, மாநி­லங்­க­ள­வை­யில் சட்­டம் ஒரே நாளில் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக வர­லாற்­றில் இல்லை.

    ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும்!

    இந்­தியா கூட்­டணி நிச்­ச­யம் ஆட்­சிக்கு வரும். அப்­போது ‘நீட்’ தேர்வு முடி­வுக்கு வரும். ஜெய­ல­லிதா விவ­கா­ரம் குறித்து ஒன்­றும் அறி­யா­மல் நிர்­மலா சீதா­ரா­மன் பேசி வரு­கி­றார். ஜெய­ல­லிதா மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­போ­து­தான் நிர்­மலா சீதா­ரா­மன் அமைச்­ச­ராக இருக்­கி­றார் என்­பதே தெரி­ய­வந்­தது. மத்­திய அமைச்­சர்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் எதை வேண்­டு­மா­னா­லும் பேசு­வார்­கள். எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் பேசு­வதை உரி­மைக் குழு­வுக்கு அனுப்­பு­வ­தன் மூலம் ஒன்­றிய பா.ஜ.க. அரசு மிரட்­டல் விடுக்­கி­றது. மணிப்­பூர் மாநி­லத்­தில் 100 நாட்­க­ளுக்கு மேலாக பதட்­டம் நில­வு­கி­றது. 150-க்கும் மேற்­பட்ட மக்­கள் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். 1 லட்­சம் பேர் இடம் பெயர்ந்து பதுங்கி வாழ்­கின்­ற­னர். இப்­போது ஒரு தக­வல் வெளி­வந்­துள்­ளது. மணிப்­பூரை சேர்ந்த 230 பேர் மியான்­மர் காடு­க­ளில் தவிக்­கின்­ற­னர்.

    கவலைப்படாத பிரதமர்!

    மணிப்­பூர் விவ­கா­ரத்­தில் பிர­த­ம­ரின் விளக்­கம் தேவை என்­பதே எதிர்க்­கட்­சி­க­ளின் ஒரு­மித்த கோரிக்­கை­யாக இருந்­தது. ஆனால் பிர­த­மர் மோடி 2 நிமி­டம் மட்­டுமே மணிப்­பூர் பற்றி பேசி உள்­ளார். பெண்­கள் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டது பற்றி விளக்­கம் அளிக்­க­வில்லை. மணிப்­பூர் பிரச்­சினை முடிந்து விட்­டது போல நாடா­ளு­மன்­றத்­தில் ஒன்­றிய அரசு விளக்­கம் அளிக்­கி­றது. மணிப்­பூர் பற்றி பிர­த­மர் மோடி ஒரு ­நா­ளும் கவ­லைப்­ப­ட­வில்லை. தி.மு.க.வை கண்டு பிர­த­மர் மோடி, உள் துறை அமைச்­சர் அமித்ஷா அச்­சம் அடைந்­துள்­ள­னர்.

    நாடா­ளு­மன்­றத்­தில் விவா­தம் நடத்­தா­மல் மசோ­தாக்­கள் நிறை­ வேற்­றப்­ப­டு­கின்­றன. பல குற்­றங்­க­ளுக்கு தண்­ட­னை­கள் குறைப்பு, 42 சட்­டங்­க­ளில் திருத்­தங்­கள் கொண்­டு­வந்­துள்­ளது பா.ஜ.க. அரசு. எதிர்க்­கட்­சி­களை விமர்­சிக்­கும் அர­சாக மட்­டுமே பா.ஜ.க. செயல்­பட்டு வரு­கி­றது. மணிப்­பூர் கல­வ­ரத்­தில் பலர் உயி­ரி­ழந்­துள்­ள­னர், பலர் காடு­க­ளில் பதுங்கி வாழ்ந்து வரு­கின்­ற­னர். மணிப்­பூர் கல­வ­ரம் குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் விளக்­கம் அளிக்­கா­மல் பொறுப்­பற்ற முறை­யில் பிர­த­மர் மோடி செயல்­ப­டு­ கி­றார். நாட்­டின் பிரச்­சி­னை­களை தீர்க்­கா­மல், அலட்­சி­ய­மாக செயல்­பட்டு வரு­கி­றார் பிர­த­மர் மோடி.

    பா.ஜ.க.வுக்கு அச்சம்!

    உள்­துறை அமைச்­சர் அமித்ஷா மணிப்­பூர் சென்­று­வந்­தால் பிரச்சி்னை முடிந்­து­விட்­ட­தாக ஒன்­றிய அரசு கூறு­ கி­றது. இந்­தியா கூட்­டணி பெயரை கேட்­டாலே பா.ஜ.க. அர­சுக்கு கோபம் வரு­கி­றது. நாடா­ளு­மன்­றத்தை முடக்க வேண்­டும் என்­பது எங்­கள் நோக்­கம் அல்ல; மணிப்­பூர் கொடூ­ரம் குறித்து பிர­த­மர் மோடி பேச வேண்­டும் என்­ப­தற்­கா­கவே குரல் எழுப்­பி­னோம். மாநில கட்­சி­யான தி.மு.க. மீது நாடா­ளு­மன்­றத்­தில் பிர­த­மர், உள்­துறை அமைச்­சர் விமர்­ச­னம் வைக்­கி­றார்­கள் என்­றால் அவர்­க­ளுக்கு அச்­சம் இங்­கு­தான் உள்­ளது. தமிழ்­நாட்­டில் அவர்­கள் நினைத்­ததை சாதிக்க முடி­யாது என்­பதை கடந்த காலத்­தில் நிரூ­பித்­துள்­ளோம், வரும் தேர்­த­லி­லும் நிரூ­பிப்­போம்.

    இவ்­வாறு திருச்சி சிவா எம்.பி. பேட்டி­ய­ளித்­தார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments