spot_img
More
    முகப்புசெய்திகள்’’ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்தது என்ன..!’’ ஜன­நா­யக மாதர் சங்­கக் கூட்­டத்­தி­ல் பாப்பா உமா­நாத் விளக்கம்

    ’’ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்தது என்ன..!’’ ஜன­நா­யக மாதர் சங்­கக் கூட்­டத்­தி­ல் பாப்பா உமா­நாத் விளக்கம்

    பெண்­க­ளி­டம் அனு­தா­பத்தை உரு­வாக்­கும் வகை­யில், அவை­யில் அப்­போது அமைச்­ச­ராக இருந்த துரை­மு­ரு­கன் ஜெய­ல­லி­தா­வின் புட­வை­யைப் பிடித்து இழுத்­த­தாக ஒரு உண்மைக்­குப் புறம்­பான செய்தி பரப்­பப்­பட்­டது!

    அந்த கால கட்டத்­தில் அவை­யில் உறுப்­பி­ன­ராக இருந்த மார்க்­சிஸ்ட் சட்­ட­மன்ற உறுப்பினர் பாப்பா உமாநாத், “துரை­மு­ரு­கன் ஜெய­ல­லி­தா­வின் புட­வையை இழுத்தார் என்று பத்திரிகை­க­ளில் பரப்­பப்படும் செய்தி முற்றிலும் தவ­றா­னது” என்று குறிப்­பிட்­டார். இது­கு­றித்து ஜன­நா­யக மாதர் சங்­கக் கூட்­டத்­தி­லேயே பாப்பா உமா­நாத் பேசி­னார்.

    “சட்­ட­ச­பை­யில் நடந்த நிகழ்ச்­சி­க­ளைக் குறித்து தவ­றான தக­வல்­க­ளைத் தந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். சில பத்­தி­ரி­கை­கள் தவ­றான செய்­தி­களை போட்டு இருக்­கின்­றன. நான் சட்­ட­ச­பை­யில் இருந்து நேரில் பார்த்ததை உங்­க­ளி­டம் கூறு­கின்­றேன்” என அவை ஆரம்­பித்­த­தி­லி­ருந்தே நடந்த சம்­ப­வங்­களை விவ­ரித்து விட்டு, தொடர்ந்து பேசி­ய­தா­வது :- “முதல்­வர் பட்­ஜெட்டை படித்­தார். அந்த நேரத்­தில் ஜெய­ல­லி­தா­வின் கை முதல்வரின் கையி­லி­ருந்த பட்­ஜெட் மீது தாவி­யது. அப்­போது அ.தி.மு.க. உறுப்­பி­னர் புத்தகத்தை முதல்­வரை நோக்கி வீச, அந்­தப் புத்­த­கம் பட்டு முதல்­வர் அணிந்­தி­ருந்த கண்­ணாடி கீழே விழுந்து நொறுங்­கி­யது.

    பின்­னர் அ.தி.மு.க.வினர் மைக்­கு­க­ளைப் பிடுங்கி வீச, அமைச்­சர் வீர­பாண்டி ஆறு­மு­கம் அடி­பட்டு இரத்­தம் சொட்ட காணப்­பட்­டார். ஜெயலலிதா தனது ஆச­னத்­தில் அமர்ந்­தி­ருந்­தார். அவ­ரைச் சுற்றி அவ­ரது எம்.எல்.ஏ.க்கள் பாது­காப்­பாக நின்றனர். 10 நிமி­டம் என்ன நடந்­தது என்றே தெரியவில்லை. பின் ஜெய­லலிதாவை அவ­ரது எம்.எல்.ஏ.க்கள் அழைத்­துச் சென்­ற­னர். ஆனால், ஜெய­ல­லிதா வெளியே சென்று, “அமைச்­சர் துரை­மு­ரு­கன் சேலை­யைப் பிடித்து இழுத்­தார்; மான­பங்­கப்­ப­டுத்தினார் – என்­றெல்­லாம் கூறு­வது அப்­பட்டமான பொய். அனு­தா­பத்­தைப் பெற வேண்­டும் என்­ப­தற்­காக இப்­ப­டிப்­பட்ட கீழ்த்­த­ர­மான செய­லில் ஈடு­ப­டு­வதா? நாங்­கள் (கம்­யூ­னிஸ்டு) பெண்­கள் நல­னில் அக்­கறை கொண்­ட­வர்­கள். அது­போன்ற சம்­ப­வம் நடந்து இருந்­தால் பார்த்­துக்கொண்டு இருப்போமா? ஜெய­ல­லிதா – தான் ஒரு நடிகை என்­பதை நிரூ­பித்துவிட்­டார். தி.மு.க.வைக் காப்­பாற்ற வேண்­டும் என்­ப­தற்­காக கூற­வில்லை. உண்­மை­யைச் சொல்கிறேன். அமைச்­சர் துரை­மு­ரு­கன் அவ­ரது சேலையை இழுக்­க­வும் இல்லை; அவரை மான­பங்­கப்­ப­டுத்­த­வும் இல்லை.”

    – இவ்­வாறு மயி­லா­டு­து­றை­யில் மார்ச் 29-ந் தேதி மார்க்­சிஸ்ட் உறுப்­பி­னர் பாப்பாஉமா­நாத், ஜன­நா­யக மாதர் சங்­கக் கூட்­டத்திலேயே பேசி­னார்.

    இந்­தத் தக­வல்­க­ளெல்­லாம் மொத்­த­மாக மறைக்­கப்­பட்டு – இன்­ற­ள­வும் துரைமுரு­கன் ஜெய­ல­லி­தா­வின் புட­வையை பிடித்து இழுத்­தார் – என்ற வடி­கட்­டிய பொய்­தானே வலம் வந்து கொண்­டி­ருக்கிறது. உண்மைகளை மறைத்து – கழகத்தை களங்கப்படுத்த எப்படி எல்லாம் ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது என்பதை விளக்கவே இந்த விவகாரங்களை மீண்டும் விரிவாகத் தர வேண்டியுள்ளது.

    – முரசொலி

    சில நினைவலைகளிலிருந்து…

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments