spot_img
More
    முகப்புஅதிகம் வாசிக்கப்பட்டவை’’தமிழ்நாடு அரசு விருது - தமிழ் அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்..!’’ அக்டோபர் 15 கடைசி நாள்

    ’’தமிழ்நாடு அரசு விருது – தமிழ் அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்..!’’ அக்டோபர் 15 கடைசி நாள்

    தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அறிஞர்களின் தமிழ் தொண்டினை பாராட்டி விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 75 விருதுகள் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த விருதுகளைப் பெற விரும்புவோர், அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ் அறிஞர்களை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது நீங்கள் அறிந்த ஒன்றே. 

    அவ்வகையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கும், 2023-ஆம் ஆண்டுக்கான 74  விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞர் பெருமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வேண்டப்படுகின்றன.

    விருதுகளின் அணிவரிசை:-

    விருது நபர் பரிசு விவரம்
    அ. திருவள்ளுவர் நாள் விருதுகள்    
    1. திருவள்ளுவர் விருது 1 ரூ.2.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை
    2. மகாகவி பாரதியார் விருது 1 ” “
    3. பாவேந்தர் பாரதிதாசன் விருது 1 ” “
    4.       தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது 1 ” “
    5. கி. ஆ. பெ. விசுவநாதம் விருது 1 ” “
    6. பெருந்தலைவர் காமராசர் விருது 1 ” “
    7. பேரறிஞர் அண்ணா விருது  1 ” “
    8.  இலக்கிய மாமணி விருது 3 ரூ.5.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை
    ஆ. தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்    
    1.   தமிழ்த்தாய் விருது,  1 ரூ. 5.00 இலட்சம், கேடயம், தகுதியுரை
    2.   கபிலர் விருது,  1 ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை
    3.   உ.வே.சா. விருது,  1 ” “
    4.   கம்பன் விருது,  1 ” “
    5.   சொல்லின் செல்வர் விருது,  1 ” “
    6.  உமறுப் புலவர் விருது,  1 ” “
    7.  ஜி.யு. போப் விருது,  1 ” “
    8.  இளங்கோவடிகள் விருது,  1 ” “
    9.  அம்மா இலக்கிய விருது,  1 ” “
    10. மொழி பெயர்ப்பாளர் விருது,  10 ” “
    11.  ‘சிந்தனைச்சிற்பி’ சிங்காரவேலர் விருது,  1 ” “
    12. அயோத்திதாசப் பண்டிதர் விருது,  1 ” “
    13.  மறைமலையடிகளார் விருது,  1 ” “
    14.  அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது,  1 ” “
    15.   காரைக்கால் அம்மையார் விருது,  1 ” “
    16.   தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது,  3 ரூ.2.00 இலட்சம், கேடயம், தகுதியுரை, பொன்னாடை
    17.  தமிழ்ச் செம்மல் விருது 38 மாவட்டந்தோறும் ஒருவருக்கு தலா ரூ. 25,000/- மற்றும் தகுதியுரை
    மொத்த விருதுகள் 75  

    தகைசான்ற அறிஞர் பெருமக்கள் http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாகவோ அல்லது தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 15.10.2023 ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகின்றோம். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது. மேற்கண்ட இணையதளத்திலேயே போதுமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

    கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044- 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (15.10.2023) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை அறிஞர் பெருமக்கள் நினைவிற் கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்’’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments