Home செய்திகள் ’’ஊர்க்காவல் படை பணி ஆகஸ்ட் 31 கடைசி நாள்..!’’ சென்னையில் வேலைவாய்ப்பு

’’ஊர்க்காவல் படை பணி ஆகஸ்ட் 31 கடைசி நாள்..!’’ சென்னையில் வேலைவாய்ப்பு

0
’’ஊர்க்காவல் படை பணி ஆகஸ்ட் 31 கடைசி நாள்..!’’ சென்னையில் வேலைவாய்ப்பு

“சென்னை ஊர் காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன” என்று சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு பாஸ் ஆனவர்கள், 18 வயதில் இருந்து 50 வயதுக்குள் இருப்போர் இந்த வேலைக்கு தகுதி உடையவர் ஆவர்.

சென்னையில் ஊர் காவல் படையில் சேர ஆர்வமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார்.

இப்படைக்கான தகுதிகள்:

1. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தவறியவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
2. இப்படையில் சேர 18 முதல் 50 வயதுக்குள் இருத்தல் அவசியம்.
3. ரேஷன் கார்டு வைத்திருத்தல் வேண்டும்.
4. எவ்விதமான குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
5.ஒழுக்கமுடையவராக இருத்தல் வேண்டும்.
6. சென்னையில் வாழ்பவராக இருக்க வேண்டும்.

ஊர்க்காவல் படையினருக்கு 45 நாட்கள் வீதம் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்க[படும். அதன்பிறகு அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு உதவி செய்யும் வேலைக்கு அனுப்பப்படுவர். போக்குவரத்து சீர் செய்தல், விழாக் காலங்களில் காவல் துறையினருக்கு உதவுதல், தேர்தல் பணி என்று அவ்வப்போது தமிழ்நாடு காவல் துறை உத்தரவிடும் வேலைகள் தரப்படும்.

இவர்களுக்கு தேவையான சீருடை, தொப்பி மற்றும் காலனி போன்றவை காவல்துறையினர் வழங்குவர். இரவு நேரத்தில் ரோந்து பணி பகல் நேரத்து ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிகளுக்கு ரூபாய் 560 சிறப்பு படியாக வழங்கப்படும். மேலும் இப்படையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் குடியரசு தலைவர் பதக்கங்கள் வழங்கப்படும் என்று காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தபால் அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
சென்னை ஊர் காவல் படை தலைமை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 15

அலைபேசி எண் : 044 2345 244 / 2442

தே. சுகன்யா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here