spot_img
More
    முகப்புசெய்திகள்"செப். 30-க்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது - ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!"

    “செப். 30-க்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது – ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!”

    "செப். 30-க்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது

    அதாவது, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது. ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. மேலும், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம்.

    ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது. இந்த நிலையில், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.

    ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது எப்படி?

    * மே 23 ஆம் தேதி முதல் பொது மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும்.

    * பொது மக்கள் ஒரே சமயத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

    * ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை பொது மக்களிடம் வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    # செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் தொடர்ந்து சட்டப்பூர்வ பயன்பாட்டுக்கு உகந்ததாகவே இருக்கும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments