சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 10-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 17-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR) தரமணி, சென்னை.
பணி: மல்ட்டி டாஸ்க் ஸ்டாப் (அலுவலக உதவியாளர்)
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு பாஸ் (12, டிப்ளமோ, டிகிரி, டைப்ரட்டிங், ஆபீஸ் ஆட்டோமேஷன், டிரைவிங் என்று கூடுதல் தகுதியுடன் 10-க்கு மேல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்)
விரும்பத்தக்கத் தகுதி: மத்திய, தன்னாட்சி, மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் வேலை பார்த்த முன் அனுபவம் விரும்பத்தக்கது. ஐடிஐ சார்ந்த பணிகள், கம்யூட்டர் இயக்குதல், டிரைவிங் போன்ற பணிகள் தெரிதல் நன்று.
வயது: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வேலை விபரம்: அலுவலகத்தை பராமரித்தல், ஜெராக்ஸ் எடுத்தல், மெயில் அனுப்புதல், அவலுவலக அன்றாட பணிகளில் உயர் அலுவலர்களுக்கு உதவுதல், கம்யூட்டர் பணிகளில் உதவிடுதல், அலுவலக அறைகளை திறத்தல் மற்றும் மூடுதல், அலுவலகத்துக்கு வரும் பார்வையாளர்களை அமர வைத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புதல் போன்ற பணிகள். (General Cleanliness and upkeep of the Section/Unit. Carrying files and papers within the building. Physical maintenance of records of the Section. Photocopying ,sending of mails, etc. Other non-clerical work in the Section/Unit. Assisting in routine office work in the Section/Unit.Assisting on the computer. Cleanliness of rooms,dusting of furniture,etc. Delivering Dak(outside the building). Watch and ward duties. Opening & Closing of rooms. Cleaning of the building , fixtures, etc. work related to his/her ITI qualifications, if it exists. Driving of vehicles , it in possession of a valid driving license. Upkeep lawns, parks, potted plants,etc. Any other work assigned by the superior authority).
பணியிடங்கள்: 34 (SC-06, OBC-09, EWS-03 ,UR-16)
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு தேர்வு கட்டணம் ரூ.300. எஸ்சி., எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், என்.ஐ.டி.டி.டி.ஆர் பணியாளர்கள் ஆகியோருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பம் : ஜூலை 17-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். http://www.nitttr2023recruitment.in/ . ஆன்லைனில் செய்த விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட், மற்றும் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து Registered Post / Speed Post /Courier 31-07-2023 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு +91 94451 41467 Email : nitttrcadmin@nitttrc.edu.in Telno :044 22545436

