spot_img
More
    முகப்புசெய்திகள்’’கொத்­த­டி­மைக் கூட்­டத்­துக்கு – படு­தோல்­வியை பரி­சா­கத் தாருங்­கள்..!'’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ’’கொத்­த­டி­மைக் கூட்­டத்­துக்கு – படு­தோல்­வியை பரி­சா­கத் தாருங்­கள்..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ‘‘கொத்­த­டி­மைக் கூட்­டத்­துக்கு – படு­தோல்­வியை பரி­சா­கத் தாருங்­கள்! கட்­சிக்­காக உழை­யுங்­கள்; மக்­க­ளுக்காக உழை­யுங்­கள்! வெற்­றியே நம் இலக்கு!’’ என்று திமுக தலை­வர் முதல்­வர் மு.க.ஸ்டாலின், நாடா­ளு­மன்­றத் தேர்­த­லை­யொட்டிதிருப்பூரில், நேற்று நடை­பெற்ற மேற்கு மண்­டலவாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்­டத்­தில் உரையாற்­றும்­போது வேண்டுகோள் விடுத்­தார்.

    திமுக தலை­வ­ரும் முத­ல­மைச்­ச­ரு­மான மு.க.ஸ்டாலின், நேற்று (24-–9–-2023) திருப்­பூ­ரில் (காங்­கே­யம் – படி­யூர் அருகே) நடை­பெற்ற மேற்கு மண்­டல கழக வாக்­குச்­சா­வடி பொறுப்­பா­ளர்­கள் பயிற்­சிப் பாச­றைக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு ஆற்­றிய உரை வரு­மாறு :-

    மேற்கு மண்­ட­லத்­தைச் சார்ந்­தி­ருக்­கும் பாக முக­வர்­கள் கூட்­டத்­தைத்­தான் நான், அமைச்­ச­ராக இருக்­கும் சாமி­நா­த­னி­டத்­தி­லும், இந்த மண்­ட­லத்­தைச் சார்ந்­தி­ருக்­கும் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளி­ட­மும் கூட்­டும்­படி கூறி­யி­ருந்­தேன். ஆனால், அவர்­கள் பாக முக­வர்­கள் கூட்­டத்தை மட்­டு­மல்ல, பாக முக­வர்­க­ளின் மண்­டல மாநாட்­டையே இங்கே கூட்­டி­யி­ருக்­கி­றார்­கள். அதற்­காக அவர்­க­ளுக்கு எல்­லாம் நான் முத­லில் என்­னு­டைய நன்­றி­யைத் தலை­மைக் கழ­கத்­தின் சார்­பில் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு ­கி­றேன்.

    நம்­மு­டைய கழ­கத்­தின் பொதுச் செய­லா­ளர் அண்­ணன் துரை­மு­ரு­கன் அவர்­கள் எடுத்­துச் சொன்­ன­து­போல, நாம் இந்­திய நாடா­ளு­மன்­றத்­தின் தேர்­தலை எதிர்­நோக்­கிக் காத்­தி­ருக்­கி­றோம். நாம் – தேர்­தல் பணி­யின் தொடக்­கப் புள்­ளி­யான பாக முக­வர்­கள் கூட்­டத்தை தொடர்ந்து நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம்.

    மத்­திய மண்­டல மாவட்­டங்­க­ளுக்­கான பாக முக­வர்­கள் கூட்­டம் திருச்­சி­யி­லும் – தென் மண்­டல மாவட்­டங்­க­ளுக்­கான பாக முக­வர்­கள் கூட்­டம் இரா­ம­நா­த­பு­ரத்­தி­லும் – நடந்து முடிந்­தி­ருக்­கி­றது. மூன்­றா­வ­தாக மேற்கு மண்­டல மாவட்­டங்­க­ளுக்­கான கூட்­டம் இந்த திருப்­பூ­ரில் காங்­கே­யம் பகு­தி­யில் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

    உங்­கள் திரு­மு­கங்­க­ளைப் பார்ப்­ப­தற்­கா­கத்­தான் நான் திருப்­பூர் வந்­தி­ருக்­கி­றேன். என்­னைப் பார்ப்­ப­தில் நீங்­கள் அடை­யும் உற்­சா­கம் – ஆர்­வத்தை விட உங்­க­ளைப் பார்ப்­ப­தில் நான் அடை­யும் மகிழ்ச்சி என்­பது மிக மிக அதி­கம். அதற்கு அளவே இல்லை. “ஏன் இவ்­வ­ளவு அலை­கி­றீர்­கள்? பய­ணத்­தைக் குறைத்­துக் கொள்­ளக் கூடாதா?” என்று என் மேல் அக்­க­றை­யும் பாச­மும் கொண்­ட­வர்­கள் சொல்­லும்­போ­தெல்­லாம் நான் சொல்­வது – “கழக உடன்­பி­றப்­பு­க­ளை­யும் – தொண்­டர்­க­ளை­யும் பார்க்­கும்­போது நான் அடை­யும் உற்­சா­கத்­திற்கு ஈடு இணை எது­வும் கிடை­யாது. என்­னு­டைய களைப்பு எல்­லாம் காற்­றாக பறந்து விடு­கி­றது” என்று சொல்­வேன். அப்­ப­டி­யான உற்­சா­க­மான மன­நி­லை­யோடு தான் உங்­கள் முன்­னால் கம்­பீ­ர­மாக தெம்­போடு நிற்­கி­றேன்.

    இது திருப்­பூர். திரா­விட இயக்­கம் கரு­வான ஊர். பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார் அவர்­க­ளும், காஞ்சி தந்த வள்­ளு­வன் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளும் முதன் முத­லில் சந்­தித்த ஊர் இந்த திருப்­பூர். அந்த வகை­யில் பல்­வேறு அர­சி­யல் திருப்­பங்­க­ளுக்கு அடித்­த­ள­மிட்ட ஊர்­தான் இந்த திருப்­பூர்! தியா­கத்­தின் திரு­வு­ரு­வ­மா­கப் போற்­றப்­ப­டும் கொடி காத்த கும­ரன் வாழ்ந்த ஊர் இந்த திருப்­பூர்.

    இந்­தியை எதிர்த்­தும் – தமி­ழைக் காக்­க­வும் 1965-ஆம் ஆண்டு போராட்­டம் நடந்­த­போது கல்­லூரி மாண­வர்­கள் மட்­டு­மல்ல – பள்ளி மாண­வர்­க­ளும் அதி­கம் பங்­கெ­டுத்த ஊர் இந்த திருப்­பூர். இப்­ப­டிப்­பட்ட பெரு­மை­மிகு திருப்­பூரை மாந­க­ராட்­சி­யாக உயர்த்­தி­யது மட்­டு­மல்ல, இந்­தத் திருப்­பூ­ரைத் தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு புதிய மாவட்­டம் உரு­வாக்­கி­ய­வ­ரும் நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள்­தான். இப்­ப­டிப்­பட்ட பெரு­மைக் கு­ரிய இந்­தத் திருப்­பூ­ரில் இன்று பாக முக­வர்­கள் கூட்­டம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

    இதை மிகச் சிறப்­போ­டும் எழுச்­சி­யோ­டும் ஏற்­பாடு செய்­தி­ருக்­கிற மாண்­பு­மிகு செய்­தித் துறை அமைச்­சர் என்­னு­டைய அரு­மைச் சகோ­த­ரர் மு.பெ.சாமி­நா­தன் அவர்­க­ளைப் பாராட்­டு­கி­றேன். வாழ்த்­து­கி­றேன்.

    மு.பெ. என்­பது அவ­ரது முன்­னெ­ழுத்­தாக இருந்­தா­லும், உண்­மை­யில் அவர், ‘மூப்பே அடை­யாத சாமி­நா­தன்’ என்று சொல்­லத்­தக்க வகை­யில் இள­மை­யாவே காட்சி அளிப்­பார். இளை­ஞ­ர­ணி­யில் என்­னு­டன் தொடக்ககாலத்­தில் இருந்தே பய­ணித்­த­வர் சாமி­நா­தன்.

    வெள்­ளக்­கோ­வில் ஒன்­றிய இளை­ஞ­ரணி துணை அமைப்­பா­ள­ராக இருந்து மாநில இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் என்ற தகு­திக்கு உயர்ந்­த­வர் அவர். இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் பொறுப்பு என்­னி­டம் இருந்து அவ­ருக்­குத்­தான் போனது. அதில் இருந்தே அவ­ரின் உழைப்­பை­யும் திற­மை­யை­யும் தெரிந்து கொள்­ள­லாம்.

    தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளது அமைச்­ச­ர­வை­யில் நெடுஞ்­சா­லைத் துறை அமைச்­ச­ரா­கச் சிறப்­பா­கப் பணி­யாற்­றி­னார். இப்­போது, நம்­மு­டைய அமைச்­ச­ர­வை­யில் செய்­தித்­துறை அமைச்­ச­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார். நிறை­கு­டம் தளும்­பாது என்­ப­தற்கு ஏற்ப, அடக்­க­மா­வும் – அமை­தி­யா­வும் – அதே நேரத்­தில் பொறுப்பை உணர்ந்­தும் பணி­யாற்­றக் கூடி­ய­வர்­தான் சாமி­நா­தன்.

    அவ­ருக்கு தோளாடு தோள் நின்ற மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் – நிர்­வா­கி­கள் எல்­லா­ருக்­கும் என்­னு­டைய மன­மார்ந்த நன்­றியை மீண்­டும் ஒரு­முறை தலை­மைக் கழ­கத்­தின் சார்­பி­லும், என்­னு­டைய சார்­பி­லும் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்.

    என்­னு­டைய தலை­மை­யில், கடந்த 22.03.2023 அன்­றைக்கு சென்னை, அண்ணா அறி­வா­ல­யத்­தில் கழக மாவட்­டச் செய­லா­ளர்­கள் கூட்­டம் நடத்­தப்­பட்­டது. அதில் இருந்தே, நாம் தேர்­தல் பணி­க­ளைத் தொடங்­கி­விட்­டோம். தமிழ்­நாடு முழு­வ­தும் பூத் கமிட்­டி­களை அமைத்­தி­ருக்­கி­றோம். ஒவ்­வொரு வாக்­குச் சாவ­டி­யி­லும் வாக்­குச்­சா­வடி பொறுப்­பா­ளர்­கள் (BLA-2) நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.

    கோடிக்­க­ணக்­கான உறுப்­பி­னர்­கள் கொண்ட இயக்­கத்­திற்­காக, தேர்­தல் பணி­க­ளைச் செய்­யப் போகி­ற­வர்­கள் நீங்­கள். பல கட்ட ஆய்­வு­க­ளுக்­குப் பின்­பு­தான் ‘வாக்­குச்­சா­வடி பொறுப்­பா­ளர்’ என்ற அடை­யாள அட்டை உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

    இந்த அட்­டை­யைப் பெற்ற மேற்கு மாவட்­டங்­க­ளின் பொறுப்­பா­ளர்­கள் மட்­டும் இங்கு முதல்­கட்­ட­மாக அழைக்­கப்­பட்டு இருக்­கி­றீர்­கள். உங்­க­ளுக்­கான வகுப்­பு­கள் காலை முதலே நடந்­து­கொண்டு வரு­கி­றது.

    * ‘வாக்­குச் சாவ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளின் கட­மை­க­ளும் பணி­க­ளும்’ என்ற தலைப்­பில் தலை­சி­றந்த வழக்­க­றி­ஞ­ரும், நாடா­ளு­மன்ற மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரு­மான என்.ஆர். இளங்கோ அவர்­க­ளும் –

    * ‘வாக்­கா­ளர் பட்­டி­யல் சரி­பார்ப்­புப் பணி­கள் மற்­றும் அதன் முக்­கி­யத்­து ­வம்’ குறித்து செயல் வீரர் மாவட்­டச் செய­லா­ளர் ராஜேஸ்­கு­மார் எம்.பி. அவர்­க­ளும் –

    * ‘சமூக வலைத்­த­ளங்­க­ளின் பயன்­பா­டும், செயல்­ப­டுத்த வேண்­டிய முறை­யும்’ என்­பது குறித்து கழ­கத் தொழில்­நுட்ப அணி மாநில துணைச் செய­லா­ளர் சேலம் தர­ணி­த­ரன் அவர்­க­ளும் உங்­க­ளுக்கு எடுத்­துச் சொல்லி இருக்­கி­றார்­கள்.

    கொள்கை வழி­காட்­டு­தலும் தேர்­தல் பயிற்சியும் வழங்­கிய பாசறை இது!

    * கழ­கத்­தின் வர­லாறு – அடிப்­ப­டைக் கொள்­கை­கள் – திரா­விட இயக்­கத்­தின் கோட்­பா­டு­கள் – நவீன தமிழ்­நாட்டை உரு­வாக்க நாம் எடுத்­தி­ருக்­கும் முயற்­சி­கள் – திரா­விட மாடல் ஆட்சி ஆகி­யவை குறித்த அடிப்­ப­டைத் தக­வல்­களை கழ­கக் கொள்கை பரப்­புச் செய­லா­ள­ரும், கழக மாநி­லங்­க­ள­வைக் குழுத் தலை­வ­ரு­மான என்­னு­டைய அரு­மைச் சகோ­த­ரர் திருச்சி சிவா எம்.பி. அவர்­க­ளும் – மாநி­லத் திட்­டக் குழுத் துணைத் தலை­வர் பேரா­சி­ரி­யர் ஜெய­ரஞ்­சன் அவர்­க­ளும் உங்­க­ளுக்கு எடுத்­துச் சொல்லி இருக்­கி­றார்­கள்.

    இதன் மூல­மாக கொள்கை வழி­காட்­டு­த­லும் – தேர்­தல் பயிற்­சி­யும் உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

    இவை எல்­லா­வற்­றை­யும் மன­தில் வைத்து நீங்­கள் செயல்­பட வேண்­டும். இவை இந்­தத் தேர்­த­லுக்கு மட்­டு­மல்ல, எந்­தத் தேர்­த­லுக்­கும் பயன்­ப­டுத்த வேண்­டிய பணி. நாடா­ளு­மன்­றத் தேர்­தலை எதிர்­நோக்கி நாம் காத்­தி­ருக்­கி­றோம். இந்த முக்­கி­ய­மான தேர்­த­லுக்­குத்­தான் நீங்­கள் வாக்­குச்­சா­வடி பொறுப்­பா­ளர்­கள் ஆகி­யி­ருக்­கி­றீர்­கள்.

    கழ­கத்­தின் வாக்­குச்­சா­வடி பொறுப்­பா­ளர் என்ற நிலையை அடைந்­தி­ருக்­கும் உங்­கள் எல்­லோ­ருக்­கும் என்­னு­டைய மன­மார்ந்த வாழ்த்­து­க­ளை­யும், பாராட்­டு­தல்­க­ளை­யும் நான் மீண்­டும் மீண்­டும் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்.

    * நாமக்­கல் கிழக்கு, * நாமக்­கல் மேற்கு

    * ஈரோடு தெற்கு, * ஈரோடு வடக்கு

    * திருப்­பூர் வடக்கு, * திருப்­பூர் தெற்கு

    * கோவை வடக்கு, * கோவை மாந­கர்

    * கோவை தெற்கு, * கரூர்

    * நீல­கிரி, * சேலம் மேற்கு

    * சேலம் மத்தி * சேலம் கிழக்கு ஆகிய மாவட்­டக் கழ­கங்­க­ளைச் சேர்ந்த பொறுப்­பா­ளர்­கள் இங்கு கூடி­யி­ருக்­கி­றீர்­கள்.

    மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளான,

    * அமைச்­சர் முத்­து­சாமி, * டி.எம். செல்­வ­க­ண­பதி, * பா.மு.முபா­ரக், * ஆர். ராஜேந்­தி­ரன் எம்.எல்.ஏ., * கே.ஆர்.என். ராஜேஸ்­கு­மார் எம்.பி., * க. செல்­வ­ராஜ் எம்.எல்.ஏ., * எஸ்.ஆர். சிவ­லிங்­கம், * என். நல்­ல­சி­வம் * என். கார்த்­திக், * தள­பதி முரு­கே­சன், * இல. பத்­ம­நா­பன், எஸ்.எம்.* மதுரா செந்­தில், * தொண்­டா­முத்­தூர் ரவி ஆகி­யோ­ருக்கு என்­னு­டைய மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.வாக்­குச்­சா­வ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளான நீங்­கள்­தான் உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் உள்ள வாக்­கா­ளர்­க­ளுக்கு முழு பொறுப்­பா­ளர். வாக்­குச் சாவ­டிப் பொறுப்­பா­ளர் என்­றால் நடை­பெற இருக்­கும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின் வெற்­றிக்கு நீங்­கள்­தான் பொறுப்­பா­ளர் என்­பதை மறந்­து­வி­டா­தீர்­கள்.

    “நாற்­ப­தும் நமதே! நாடும் நமதே” என்று நான் முழங்கி இருக்­கி­றேன் என்­றால் அது உங்­கள் மேல் நான் வைத்­தி­ருக்­கும் அள­வு­க­டந்த நம்­பிக்கை கார­ண­மா­கத்­தான்.

    இன்­றை­யில் இருந்து, கழ­கத்­தின் தேர்­தல் பொறுப்­பா­ளர்­கள் என்ற கம்­பீ­ரத்­தோடு நீங்­கள் கட­மை­யாற்ற வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன். வெற்றி மட்­டுமே உங்­கள் இலக்­காக இருக்க வேண்­டும். அந்த வெற்­றியை அடை­வ­தற்­கான வழி­மு­றை­க­ளில் மிகச் சரி­யாக நீங்­கள் பய­ணிக்க வேண்­டும்.

    வாக்­குச்­சா­வ­டிப் பொறுப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கும் உங்­க­ளுக்கு நிறைய கட­மை­கள் இருக்­கி­றது.

    *வாக்­கா­ளர் பட்­டி­ய­லைச் சரி பார்ப்­ப­து­தான் உங்­க­ளின் முக்­கி­ய­மான முதல் கடமை. வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் உங்­கள் வாக்­குச்­சா­வ­டிக்­கு­ரிய வாக்­கா­ளர்­க­ளின் விவ­ரங்­கள் சரி­யாக இருக்­கி­றதா, போலி வாக்­கா­ளர்­கள் யாரா­வது இருக்­கி­றார்­களா, இறந்து போன­வர்­கள் பெயர்­கள் எல்­லாம் நீக்­கப்­பட்­டி­ருக்­கி­றதா என்று முழு­மை­யாக நீங்­கள் சரி­பார்க்க வேண்­டும்.

    * முறை­யான வாக்­கா­ளர்­களை நம்மை நோக்கி ஈர்ப்­ப­து­தான் உங்­கள் இரண்­டா­வது கடமை. வாக்­கா­ளர்­களை;r சந்­தித்து பரப்­புரை செய்ய வேண்­டும், நம்­மு­டைய சாத­னை­களை அவர்­க­ளி­டம் தொடர்ந்து நீங்­கள் எடுத்­துச் சொல்ல வேண்­டும்.

    * வாக்­குப்­ப­திவு நாட்­க­ளில் வாக்­கா­ளர்­களை வாக்­குப்­ப­திவு மையங்­க­ளுக்கு வர வைப்­பது உங்­கள் மூன்­றா­வது முக்­கி­யக் கடமை.

    உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கும் ஒவ்­வொரு குடும்­பத்­தி­லும் நீங்­கள் அங்­க­மாக மாற வேண்­டும். அதற்கு, முத­லில் உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கும் ஒவ்­வொரு வாக்­கா­ள­ரைப் பற்­றி­யும் முழு­மை­யா­கத் தெரிந்து வைத்­துக் கொள்­ளுங்­கள். அதற்­கான மாதி­ரிப் படி­வம் இப்­போது உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தொகு­தி­வா­ரி­யாக அச்­சி­டப்­பட்டு விரை­வாக உங்­கள் கைக­ளுக்கு அது வந்து சேரும்.

    வாக்­கா­ள­ரின் பெயர், அவ­ரின் வயது, அவ­ரின் குடும்­பத்­தி­னர் யார், என்ன படித்­தி­ருக்­கி­றார்­கள், என்ன தொழில் செய்­கி­றார்­கள், எந்­தக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர் என்ற முழு விவ­ர­மும் உங்­க­ளி­டம் இருக்க வேண்­டும். உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில், 250 குடும்­பங்­கள் இருந்­தால், அந்­தக் குடும்­பங்­க­ளில் ஒரு­வ­ராக நீங்­கள் மாற வேண்­டும்.

    தின­மும் ஒரு மணி நேரத்­தைக் கழ­கத்­திற்­காக ஒதுக்­குங்­கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங்­க­ளால் ஒதுக்க முடி­யுமா? ஒதுக்­கு­வீர்­களா? (‘ஒதுக்­கு­வோம்!’ என கூட்­டத்­தி­னர்உரத்த குரல் எழுப்­பு­கின்­ற­னர்) அந்த ஒரு மணிநேரத்தை பூத் வேலைக்­காக ஒதுக்­குங்­கள்.

    அடுத்­த­தாக, அர­சின் திட்­டங்­க­ளை­யும் முழு­வ­தும் தெரிந்து வைத்­துக் கொள்­ளுங்­கள். உங்­க­ளி­டம் இன்­றைக்கு ஒரு புத்­த­கம் கொடுத்­தி­ருக்­கி­றோம். அதைப் படித்­துப் பார்த்­தாலே எல்­லா­வற்­றை­யும் தெரிந்து கொள்­ள­லாம்.

    யாருக்கு என்ன தேவையோ அதைத் தெரிந்­து­கொண்டு ஏற்­பாடு செய்து கொடுங்­கள். ஒரு­வ­ருக்கு முதி­யோர் உத­வித்­தொ­கை­யில் உத­வி­கள் தேவைப்­ப­ட­லாம். இன்­னொ­ரு­வ­ருக்கு பட்டா மாறு­த­லில் உதவி தேவைப்­ப­ட­லாம். இவ்­வாறு அவ­ர­வர் தேவை­யைக் கண்­ட­றிந்து, அதை நிறை­வேற்­றித் தாருங்­கள்.

    ஒவ்­வொரு நாளும் பத்து வீடு­க­ளுக்­குச் சென்று பேசுங்­கள். ஒரு மாதத்­தில் உங்­கள் வாக்­குச்­சா­வ­டி­யில் இருக்­கும் அத்­தனை வீடு­க­ளுக்­கும் நீங்­கள் சென்று பேசி­யி­ருப்­பீர்­கள். சில வீடு­க­ளில் மகிழ்ச்­சி­யாக வர­வேற்­பார்­கள். சில வீடு­க­ளில் அதை எதிர்­பார்க்க முடி­யாது. அதற்­காக நாம் விட்­டு­வி­டக் கூடாது. மீண்­டும் அடுத்த மாதம் புன்­னகை மாறா­மல் அவர்­க­ளைத் தேடிச் செல்­லுங்­கள். என்­னைப் பொறுத்­த­வரை நம்மை நிரா­க­ரிப்­ப­வர்­களே இருக்க மாட்­டார்­கள் என்று நினைக்­கி­றேன்.

    அனை­வ­ருக்­கும் பொது­வான மக்­க­ளாட்­சியை நாம் நடத்­திக்­கொண்டு வரு­கி­றோம். தமிழ்­நாட்­டில் உள்ள ஒவ்­வொரு குடும்­ப­மும் ஏதோ ஒரு விதத்­தில் பய­ன­டை­யும் திட்­டங்­க­ ளாக பார்த்­துப் பார்த்து நாம் செயல்­ப­டுத்­திக் கொண்டு வரு­கி­றோம். மக்­க­ளுக்கு நம்­மீது,நம்­மு­டைய ஆட்சி மீது நம்­பிக்கை இருக்­கி­றது.

    கடந்த 15-ஆம் தேதி­யில் இருந்து, சிறப்­பான முறை­யில் சரி­யான பய­னா­ளி­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து, ஒரு கோடிக்­கும் அதி­க­மான மக­ளி­ருக்கு மாதா­மா­தம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும், கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தி­ருக்­கி­றோம். நம்­மு­டைய தேர்­தல் வாக்­கு­று­தி­யி­லேயே மிகப்பெரிய வாக்­கு­று­தியை நிறை­வேற்­றி­விட் டோம். நீங்­கள் வாக்­கா­ளர்­களை தேடிப் போகும்­போது இந்­தத் திட்­டத்­தின் வர­வேற்­பைப் பார்க்­க­லாம்.

    நாம் ஆட்­சிக்கு வந்­த­தில் இருந்து நான் எல்லா மாவட்­டங்­க­ளுக்­கும் சுற்­றிக்­கொண்­டு­ தான் இருக்­கி­றேன். கடந்த 15-ஆம் தேதி­யின் போது இருந்த வர­வேற்­பை­விட இப்­போது பல மடங்கு அதி­க­மா­கி­யி­ருக்­கி­றது. அதற்கு இது­தான் கார­ணம். என்ன ஒரு மகிழ்ச்சி… நாமே கேட்­க­வில்லை, “ஐயா, வந்­து­விட்­டது.” – ‘‘என்ன வந்­து­விட்­டது?” – ”1000 ரூபாய் வந்­து­விட்­டது” என்று சொல்­கி­றார்­கள்.

    அதே­போல், கோடிக்­க­ணக்­கான மக­ளி­ருக்­குப் பய­ன­ளிக்­கும் திட்­டம்­தான் பேருந்­தில் கட்­ட­ண­மில்லா ‘விடி­யல் பய­ணம்’! இத­னால் மாத வரு­மா­னத்­தில் 800 ரூபா­யில் இருந்து 1200 ரூபாய் வரை பெண்­க­ளுக்கு மிச்­சம் ஆகி­றது.

    13 லட்­சம் குடும்­பங்­க­ளின் நகைக்­க­ட­னைத் தள்­ளு­படி செய்­தி­ருக்­கி­றோம். நீங்­கள் தேடிச் செல்­லும் ஒவ்­வொரு வீட்­டி­லும் இவ்­வாறு நம்­மு­டைய அர­சால் பய­ன­டை­கி­ற­வர்­கள் நிச்­ச­யம் இருப்­பார்­கள்.

    ஒரு வீட்­டில் முதி­யோர் இருக்­கி­றாரா? அவர்­கள் பய­ன­டை­யும் வகை­யில், 42 லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட பல்­வேறு திட்­டப் பய­னா­ளி­கள் பெற்­று­வ­ரும் 1000 ரூபாய் உத­வித் தொகையை 1200-ஆக ஆக்கி இருக்­கி­றோம்.

    ஒரு வீட்­டில் பள்­ளிக் குழந்­தை­கள் இருக்­கி­றார்­களா? லட்­சக்­க­ணக்­கான பள்ளி மாண­வர்­கள் காலை உண­வுத் திட்­டத்­தால் பசி­யில்­லா­மல் படிக்­கி­றார்­கள்.

    இளை­ஞர்­கள் இருக்­கும் வீடா? ‘நான் முதல்­வன்’ திறன் மேம்­பாட்­டுத் திட்­டத்­தால் லட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு கிடைத்­தி­ருக்­கி­றது.

    ஒரு வீட்­டில் கல்­லூ­ரிக்­குப் போகும் மாண­வி­கள் இருக்­கி­றார்­களா? ‘புது­மைப்­பெண்’ திட்­டத்­தின் மூல­மாக அவர்­க­ளுக்கு மாதா­மா­தம்ஆயி­ரம் ரூபாய் உத­வித் தொகை கொடுக்­கி­றோம்.

    இவ்­வாறு, ஒவ்­வொரு திட்­டத்­தா­லும் ஒவ்­வொரு குடும்­பத்­தி­லும் பலர் பய­ன­டைந்து வரு­கி­றார்­கள். தமிழ்­நாட்­டின் பெரும்­பா­லான குடும்­பங்­க­ளுக்கு மாதா­மா­தம் இவ்­வாறு மூன்­றா­யி­ரத்­தில் இருந்து நான்­கா­யி­ரம் ரூபாயை நேர­டி­யாக பல திட்­டங்­கள் மூல­மா­கக் கொடுத்து வரு­கி­றோம்.

    ஆனால், ஒன்­றி­யத்­தில் ஒரு ஆட்சி இருக்­கி­றது. அது­வும் இரண்­டா­வது முறை­யாக ஆட்­சி­யில் இருக்­கி­றது. மூன்­றா­வது முறை வரப்­போ­வ­தில்லை. வரக் கூடாது. அது­தான் முக்­கி­யம். பத்து ஆண்டு ஆகப்­போ­கி­றது. ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு கொடுத்த எந்த வாக்­கு­று­தி­யை­யும் நிறை­வேற்­ற­வில்லை. சொன்­ன­தற்கு மாறாக, ரிவர்ஸ் கிய­ரில் போய்க்­கொண்­டி­ருக்­கி­றது.

    * வெளி­நாட்­டில் பதுக்கி வைத்­தி­ருக்­கும் கருப்­புப் பணத்தை முழு­மை­யாக மீட்­பேன் என்று ஒரு­வர் சொன்­னாரே. மீட்­டாரா? இல்லை!

    * அவ்­வாறு மீட்­கப்­பட்ட கருப்­புப் பணத்தை இந்­திய மக்­கள் எல்­லோ­ருக்­கும் ஆளுக்கு 15 லட்­ச­மா­கத் தரு­வேன் என்று ஆசை காண்­பித்­தாரே. தந்­தாரா? அவர்­கள் தர­வில்லை என்­றா­லும் பர­வா­யில்லை, நம்­மு­டைய கழக ஆட்­சி­யில் பெண்­க­ளுக்கு உரி­மைத் தொகை­யாக மாதா­மா­தம் ஆயி­ரம் ரூபாய் கொடுக்­கி­றோம். அதை­யும், ‘மினி­மம் பேலன்ஸ்’ இல்லை என்று சொல்லி, பிடுங்­கிக் கொள்­கிற கொள்­ளைக்­கார ஆட்­சி­யாக ஒன்­றிய பா.ஜ.க ஆட்சி இருக்­கி­றது. தாய்­மார்­க­ளின் இந்­தக் கோபம் எல்­லாம் நிச்­ச­யம் தேர்­த­லில் எதி­ரொ­லிக்­கத்­தான் போகி­றது.

    * உழ­வர்­க­ளின் வரு­மா­னத்தை இரண்டு மடங்கு ஆக்­கு­வோம் என்று இதே மோடி 2014-இல் சொன்­னார். அவ்­வாறு எது­வும் நடந்­தி­ருக்­கி­றதாசொல்­லுங்­கள்?

    * ஆண்­டுக்கு இரண்டுகோடி இளை­ஞர்­க­ளுக்கு வேலை­ வாய்ப்பை ஏற்­ப­டுத்­தித் தரு­வேன் என்று வாக்­கு­றுதி அளித்­தார் பிர­த­மர் மோடி. ஆனால் எந்த வேலை­வாய்ப்­பும் ஏற்­ப­டுத்­தித் தர­வில்லை. சொல்­லப் போனால், கடந்த 40 ஆண்­டு­க­ளில் இல்­லாத அள­விற்கு, இந்­தி­யா­யில் வேலை­வாய்ப்­பின்மை அதி­க­ரித்து இருக்­கி­றது என்­ப­து­தான் யதார்த்­த­மாக இருக்­கி­றது. இதை நாம் கேட்­டால்… “நம்­மு­டைய படித்த இளை­ஞர்­களை எல்­லோ­ரை­யும் பக்­கோடா விற்­கச் செல்­லுங்­கள்” என்று சொல்­கி­றார்.

    * 2022-ஆம் ஆண்­டுக்­குள் இந்­தி­யா­வில் எல்­லாக் குடும்­பங்­க­ளுக்­கும் சொந்த வீடு கட்­டித் தரு­வேன் என்று பிர­த­மர் மோடி சொன்­னார். சொந்த வீடு இல்­லா­த­வர்­களே இந்­தி­யா­வில் இப்­போது இல்­லா­மல் ஆகி­விட்­டார்­களா? நீங்­களே சொல்­லுங்­கள்.

    * 2024-25-ஆம் ஆண்­டுக்­குள் இந்­தியா 5 டிரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தார நாடாக மாறும் என்று சொன்­னார்­கள். ஆனால் நடந்­தது என்ன? பண­ம­திப்பு இழப்பு என்று சொல்லி நன்­றாக இருந்த இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத்­தையே படு­கு­ழிக்­குத் தள்­ளி­விட்­டார்­கள். இந்த மேற்கு மண்­ட­லத்­தில் திருப்­பூ­ரும், கோவை­யும் தொழில்­கள் நிறைந்த மாந­க­ரங்­கள். ஆனால் பண­ம­திப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. என்று ஒன்­றிய அர­சின் தவ­றான பொரு­ளா­தா­ரக் கொள்­கை­கள் கார­ண­மாக இந்த இரண்டு நக­ர­மும் நொடிந்து போயி­ருக்­கி­றது.

    பிர­த­மர் அவர்­களே, இங்கு வந்து தொழில்­து­றை­யி­ன­ரி­டம் ஒன்­றிய அர­சால் அவர்­கள் படும் கஷ்­டங்­களை கொஞ்­சம் கேட்­டுப் பாருங்­கள். ‘டாலர் சிட்­டி’­யாக இருந்த திருப்­பூர் இப்­போது ‘டல் சிட்டி’ ஆகி­விட்­டது. தென்­னிந்­தி­யா­வின் மான்­செஸ்­ட­ரான கோவை­யின் தொழில்­து­றை­யா­னது திற­னற்ற பா.ஜ.க. அர­சால் தேய்­பிறை ஆகிக் கொண்­டி­ருக்­கி­றது.

    மாநில அர­சு­தான் தொழில்­து­றை­யி­ன­ரைச் சந்­தித்து அவர்­கள் கோரிக்­கை­க­ளைக் கேட்டு அவர்­கள் சரி­வில் இருந்து மீண்டு வரு­வ­தற்­கான உத­வி­களை, திட்­டங்­க­ளைச் செய்­து­கொண்டு வரு­கி­றோம். கொஞ்­சம் கொஞ்­ச­மாக இந்­தப் பகு­தியை பழை­ய­படி முன்­னேற்ற முயற்­சி­க­ளை­யும் எடுத்­துக்­கொண்டு வரு­கி­றோம். ஒன்­றிய அரசு இப்­போது வரைக்­கும் இவர்­க­ளுக்­காக எதை­யும் செய்ய முன்­வ­ர­ வில்லை.

    இந்­திய ரூபா­யின் மதிப்பு டால­ருக்கு இணை­யாக உய­ரும் என்று வாய்ப்­பந்­தல் போட்­டார்­கள். ஆனால் இன்­றைக்கு இந்­திய ரூபா­யின் மதிப்பு அத­ல­பா­தா­ளத்­தில் இருக்­கி­றது. இது­தான் பா.ஜ.க அரசு இந்­திய பொரு­ளா­தா­ரத்தை உயர்த்­திய இலட்­ச­ணம்.

    பிர­த­மர் அவர்­களே! உங்­க­ளி­டம் நாங்­கள் புதி­தாக எது­வும் கேக்­க­வில்லை. நீங்­கள் மேடைக்கு மேடை ஏறிக் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளில் எதை­யா­வது ஒன்­றை­யா­வது நிறை­வேற்­றிக் காட்டி இருக்­கி­றீர்­களா என்­று­தான் கேட்­கி­றோம்.

    தமிழ்­நாட்­டுக்கு வந்து பல வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­தார் பிர­த­மர் மோடி அவர்­கள். அதை­யா­வது நிறை­வேற்­றி­னாரா என்று பார்த்­தேன். அது­வும் இல்லை. குறிப்­பாக இந்த மேற்­குப் பகு­தி­க­ளைப் பொறுத்­த­வரை,

    * சேலம் உருக்­காலை உற்­பத்­தியை நவீ­னப்­ப­டுத்­து­வோம் என்று சொன்­னார்­கள். சேலத்­தில் இருந்து வந்­தி­ருப்­ப­வர்­கள் சொல்­லுங்­கள். அதைச் செய்­து­விட்­டார்­களா?

    * ஜவு­ளி­க­ளின் சொர்க்­க­மான ஈரோட்­டில், ஜவு­ளித் தொழி­லுக்­கான உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் உரு­வாக்­கப்­ப­டும் என்று சொன்­னார்­கள். ஈரோட்­டில் அவ்­வாறு வச­தி­கள் எதை­யா­வது செய்து கொடுத்­தி­ருக்­கி­றார்­களா?

    * ஈரோடு மஞ்­சளை இந்­தி­யாவே நேசிக்­கி­றது. பா.ஜ.க ஆட்­சிக்கு வந்­தால் மஞ்­சளை ஆயுர்­வே­தம் மட்­டு­மின்றி, அழகு சாத­னப் பொரு­ளா­க­வும் மாற்ற நட­வ­டிக்கை எடுப்­போம் என்று சொன்­னார்­களா இல்­லையா? ஒன்­பது ஆண்­டில் அது தொடர்­பாக ஏதா­வதுஒரு அங்­கு­லம் அள­விற்­கா­வது நடந்­தி­ருக்­கி­றதா?

    * புதி­தாக நான்கு நக­ரங்­க­ளில் விமா­ன­ நி­லை­யம் அமைப்­போம் என்று சொன்­னார்­கள். பல ஊர்­க­ளில் இருந்து வந்­தி­ருக்­கி­றீர்­கள். எந்த ஊரி­லா­வது அவ்­வாறு விமான நிலை­யம் வந்­தி­ருக்­கி­றதா?

    இவ்­வாறு டிசைன் டிசை­னாக கொடுத்த வாக்­கு­றுதி எல்­லாம் என்­னா­னது? ஒன்­றும் ஆக­வில்லை, எல்­லாம் பத்­தி­ர­மாக இன்­னும் வெறும் வாக்­கு­று­தி­யா­க­வே­தான் இருக்­கி­றது.

    நாடா­ளு­மன்­றத்­தில் சமீ­பத்­தில் பேசிய பிர­த­மர் அவர்­கள் தன்­னு­டைய ஆட்­சி­யின் சாத­னை­யாக, எதைச் சொல்­கி­றார்? ஏதா­வது பெரிய பட்­டி­ய­லா­கப் போட்­டி­ருப்­பார் என்று பார்த்­தேன். எது­வும் இல்லை.

    * சந்­தி­ரா­யன் விட்­டோம் என்று சொல்­கி­றார்.

    * ஜி-20 மாநாடு நடத்­தி­னோம் என்று சொல்­கி­றார்.

    இது இரண்­டை­யும்­தான் பெரிய சாத­னை­யா­கச் சொல்­கி­றார். ஆனால், ஊட­கங்­களே என்ன சொல்­கி­றார்­கள்? ஆண்­டுக்கு ஒரு முறை ஒவ்­வொரு நாட்­டுக்­கும் வரும் தலை­மைப் பத­வி­தான் ஜி20 மாநாட்­டுத் தலைமை. இதற்­கும் பா.ஜ.க. ஆட்­சிக்­கும் எந்­தச் சம்­பந்­த­மும் இல்லை. ஆகவே ஜி20-க்கு அவர்­கள் உரிமை கோர முடி­யாது.

    அதே­போல், 2008-ஆம் ஆண்டு நிலவை நோக்­கிய பய­ணத்தை இந்­தியா தொடங்கி, 2023-இல் அந்­தச் சாத­னை­யின் எல்­லையை நெருங்கி இருக்­கி­றது. இது­வும் தனிப்­பட்ட பா.ஜ.க ஆட்­சி­யின் சாதனை இல்லை.

    விண்­வெளி ஆராய்ச்­சிக்­காக இந்­தியா விடு­தலை அடைந்த காலம் முதல் தூவப்­பட்ட விதை­க­ளின் விளைச்­சல்­தான் சந்­தி­ர­யான் விண்­க­லம். இது இர­வும் பக­லும் உழைத்த நம்­மு­டைய இஸ்ரோ அறி­வி­ய­லா­ளர்­க­ளின் சாதனை. பண்­டி­தர் நேரு தொடங்கி மதிப்­புக்­கு­ரிய மன்­மோ­கன் சிங் அவர்­கள் வரை பல பிர­த­மர்­க­ளின் பங்கு இதில் இருக்­கி­றது. எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிறப்­புக் கூட்­டத்­தொ­ட­ரில் இதை எல்­லாம் சுட்­டிக்­காட்­டிப் ஆதா­ரத்­தோடு பேசி­யி­ருக்­கி­றார்­கள்.

    பிர­த­மர் நரேந்­திர மோடி­யி­டம் அவ­ரு­டைய ஆட்­சி­யின் சாதனை என்று சொல்­லிக் கொள்­வ­தற்கு எது­வும் இல்லை. அத­னால்­தான் மக­ளிர் இட­ஒ­துக்­கீடு மசோ­தா­வைக் கொண்டு வந்து கணக்கு காட்­டப் பார்க்­கி­றார். இதை­யா­வது சொல்லி வாக்கு கேட்­க­லாம் என்று நினைக்­கி­றார்.

    நாடா­ளு­மன்ற – சட்­ட­மன்­றங்­க­ளில் 33 விழுக்­காடு இட­ஒ­துக்­கீட்டை பெண்­க­ளுக்­குக் கொடுப்­ப­தாக இருந்­தால், உண்­மை­யி­லேயே அதில் அக்­கறை இருந்­தால், அதை உட­ன­டி­யாக வழங்க வேண்­டாமா? 2029-ஆம் ஆண்­டு­தான் வழங்­கு­வார்­க­ளாம். இவர்­கள் நிறை­வேற்­றி­யி­ருக்­கும் மசோதா படி, அதை­யும் உறு­தி­யா­கச் சொல்ல முடி­யாது.

    அது­மட்­டு­மில்­லா­மல், மக­ளிர் இட ஒதுக்­கீட்டை தேவையே இல்­லா­மல் மக்­க­ள­வைத்தொகுதி மறு­வ­ரை­யறை கூட இணைத்து இந்த மசோ­தாவை நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றார்­கள். இத­னால் தென் மாநி­லங்­க­ளின் வலிமை, தொகுதி எண்­ணிக்கை மிக­வும் குறை­யும். இந்த வஞ்­ச­கத் திட்­டத்தை எதிர்த்து கழ­கம்­தான் முத­லில் எதிர்ப்­புக் குரல் கொடுத்­தி­ருக்­கி­றது. தொடர்ந்து இதை எதிர்த்­துப் போரா­டு­வோம்!

    கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாத திற­னற்ற பா.ஜ.க தமிழ்­நாட்­டில் டெபா­சிட் வாங்­கக் கூட தகு­தி­யில்­லாத கட்சி என்று நம்மை விட அவர்­க­ளுக்கே நன்­றா­கத் தெரி­யும். அத­னால்­தான் அடிமை அ.தி.மு.க.வைப் பய­மு­றுத்தி – அச்­சு­றுத்தி தன்­னு­டைய கூட்­ட­ணி­யில் வைத்­தி­ருக்­கி­றார்­கள்.

    பா.ஜ.க.வும் – அ.தி.மு.க.வும் சண்டை போடு­வ­தாக வெளி­யில் நடிக்­கி­றார்­கள். உள்ளே நட்­பாக இருக்­கி­றார்­கள். எதற்­காக இந்த நடிப்பு? அ.தி.மு.க.வை ஆத­ரித்­தால், அவர்­க­ளின் ஊழல்­க­ளுக்கு பா.ஜ.க.வும் பொறுப்­பேற்க வேண்டி வரும். பா.ஜ.க.வை ஆத­ரித்­தால், பா.ஜ.க.வின் மத­வா­தத்­திற்கு அ.தி.மு.க.வும் துணை­போக வேண்டி வரும். அத­னால் நடிக்­கி­றார்­கள்.

    ‘போடு தோப்­புக்­க­ர­ணம்’ என்று பா.ஜ.க சொன்­னால், ‘இந்தா எண்­ணிக்­கொள்­ளுங்­கள்’ என்று சொல்­லிக்­கொண்­டி­ருக்­கும் கட்­சி­தான் அ.தி.மு.க. இங்கு இவ்­வ­ளவு சண்டை நடந்­த­போது, உள்­துறைஅமைச்­ச­ரைப் பார்க்க பழ­னி­சாமி சென்­றாரே… என்ன கார­ணம்? ஊழல் வழக்குஉச்­ச­நீ­தி­மன்­றத்­திற்கு வரு­கி­றது, காப்­பாற்­றுங்­கள் என்று காலில் விழச் சென்­றாரா? கொட­நாடு வழக்­கில் இருந்து நழு­வி­டச் சென்­றாரா? எதற்­காக தனி­யா­கச் சென்று உள்­துறைஅமைச்­ச­ரைச் சந்­தித்­தார்? இரண்டு நாட்­க­ளுக்கு முன்­னர்­கூடஅ.தி.மு.க முன்­னாள் அமைச்­சர்­கள் ஒன்­றிய அமைச்­சர்­களை திடீர் என்று சந்­தித்­தார்­களே? சென்­னை­யில் இருந்து சென்­றால் தெரிந்­து­வி­டும் என்று, கொச்­சி­யில் இருந்து சென்ற மர்ம சந்­திப்­பு­க­ளுக்­குப் பின்­னால் இருக்­கும் அர­சி­யல் என்ன? ஆட்­சி­யில் இருந்­த­போது மாநி­லத்­தின் நன்­மைக்­காக ஒன்­றிய பா.ஜ.க. அரசுமூல­மாக, தமிழ்­நாட்­டுக்கு அ.தி.மு.க கொண்டுவந்த நன்மை என்ன? எது­வும் இல்லை.

    இந்த லட்­ச­ணத்­தில் ஒரே நாடு – ஒரே தேர்­தலை குப்­புற விழுந்து ஆத­ரிக்­கி­றார் பல்­லக்­குத் தூக்கி பழ­னி­சாமி. நன்­றாக இருக்­கி­ற­தல்­லவா இந்­தப் ’பல்­லக்­குத் தூக்கி பழ­னி­சாமி’ பட்­டம்? என்ன அரு­க­தை­யில் தமிழ்­நாட்டு மக்­கள் தனக்கு வாக்­க­ளிப்­பார்­கள் என்று பழ­னி­சாமி பகல் கனவு காண்­கி­றார்? பழ­னி­சாமி அவர்­களே! சட்­ட­மன்­றத்­துக்­கும் சேர்த்து தேர்­தல் வந்­தால், உங்­கள் கட்சி இப்­போது இருக்­கும் நிலை­மைக்கு உள்­ள­தும் போய்­வி­டும், ஜாக்­கி­ரதை!

    பா.ஜ.க.வின் பாசி­சத் திட்­டங்­கள் எல்­லா­வற்­றி­கும் ஆட்­சி­யில் இருந்­த­போது தலை­யாட்­டி­விட்டு, இன்­றைக்கு பா.ஜ.க.வை எதிர்க்­கின்ற மாதிரி மக்­க­ளி­டம் காட்­டிக்­கொண்டு, மறை­மு­க­மாக பா.ஜ.க தலை­வர்­க­ளைச் சந்­தித்­துக்­கொண்டு இருக்­கும் கொத்­த­டி­மைக் கூட்­டத்­திற்­குக் கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லைப் போலவே இந்­தத் தேர்­த­லி­லும் படு­தோல்­வி­யைப் பரி­சா­கத் தர வேண்­டும்.

    இது­வரை மக்­களை ஏமாற்­றிய பா.ஜ.க. – அ.தி.மு.க. இந்­தத் தேர்­த­லில் மக்­க­ளால் தோற்­க­டிக்­கப்­பட இருக்­கி­றது. மக்­க­ளின் இந்­தக் கோபத்தை நமக்­கான வாக்­கு­க­ளாக மாற்ற வேண்­டிய கடமை வாக்­குச் சாவ­டிப் பொறுப்­பா­ளர்­க­ளான உங்­க­ளுக்கு இருக்­கி­றது.

    கட்­சிக்­காக உழை­யுங்­கள்! மக்­க­ளுக்­காக உழை­யுங்­கள். அதற்கு உரிய பலன் உங்­க­ளைத் தேடி வரும்! இயக்­கத்­திற்­காக இரவு பகல் பாரா­மல் உழைத்­த­வர்­க­ளுக்கு நல்ல எதிர்­கா­லம் உண்டு. அவர்­களை கழ­கம் எப்­போ­தும் கைவி­டாது.

    இயக்­கத்­திற்­காக ரத்த நாளங்­க­ளாக உழைக்­கும் வாக்­குச்­சா­வடி முக­வர்­களே! உங்­க­ளில் ஒரு­வ­னான இந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் உங்­க­ளி­டம் வேண்­டு­கோள் வைத்து உரை­யாற்றி இருக்­கி­றேன்.

    அடுத்த முறை உங்­க­ளைச் சந்­திக்­கும்­போது, நான் வெற்­றிச் செய்­தி­யைத்­தான் கேட்க வேண்­டும். அதற்­காக நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து உழைப்­போம்! உழைப்­போம்! உழைப்­போம்!

    நாற்­ப­தும் நமதே! நாடும் நமதே!

    இவ்­வாறு கழ­கத் தலை­வர் – முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments