spot_img
More
    முகப்புஅறிந்துகொள்வோம்’’கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டிகள்..!’’ திமுக சட்டத் துறை அறிவிப்பு

    ’’கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டிகள்..!’’ திமுக சட்டத் துறை அறிவிப்பு

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக சட்டத் துறை சார்பில் மண்டல வாரியாக பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்று அதன் விபரப்பட்டியலை சட்­டத்­து­றைச் செய­லா­ளரும் மூத்த வழக்­க­றி­ஞருமான என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அறிவித்துள்ளார்.

    தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் கழ­கத் தலை­வர்­அ­வர்­க­ளின் அறி­வு­ரைக்­கி­ணங்க தி.மு.க. சட்­டத்­து­றைச் சார்­பில் “தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் நூற்­றாண்டு விழா”­வி­னை­யொட்டி மண்­டல வாரி­யாக பேச்­சுப் போட்டி நடை­பெ­று­கி­றது.

    இது­கு­றித்து தி.மு.க. சட்­டத்­து­றைச் செய­லா­ளர் மூத்த வழக்­க­றி­ஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அறிக்கை வரு­மாறு:–

    “தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் நூற்­றாண்டு விழா”­வி­னை­யொட்டி தி.மு.க. சட்­டத் துறை­யின் சார்­பில்,சட்­டக் கல்­லூரி மாண­வர்­கள் மற்­றும் மூன்று ஆண்­டு­க­ளுக்­குட்­பட்ட இளம் வழக்­க­றி­ஞர்­க­ளுக்­கான பேச்சு போட்­டி­களை கீழே குறிப்­பிட்­டள்ள அட்­ட­வ­ணை­யில் குறிப்­பிட்­டுள்­ள­ வாறு நடத்­திட திட்­ட­மி­டப் பட்­டுள்­ளது. போட்­டி­கள் தமி­ழில் மட்­டு­மே­ந­டத்­தப்­ப­டும்.

    போட்­டி­க­ளுக்­கான தலைப்­பு­கள் பின்­வ­ரு­மாறு :

    1. கலை­ஞ­ரின் பார்­வை­யில் சமூக நீதி,

    2. கலை­ஞ­ரின் பார்­வை­யில் மாநி­ல­சு­யாட்சி,

    3. கலை­ஞ­ரின் பார்­வை­யில் மக­ளிர் முன்­னேற்­றம்,

    4. கலை­ஞ­ரின் பார்­வை­யில் தொழில் வளம்,

    5. கலை­ஞ­ரின் பார்­வை­யில் கல்வி.

    மேற்­சொன்ன இந்த ஐந்து தலைப்­பு­க­ளில் ஏதே­னும் ஒரு தலைப்­பினை போட்டி துவங்­கு­வ­தற்கு முப்­பது நிமி­டங் க­ளுக்கு முன்பு போட்டி நடத்­தும் நடு­வர்­கள் அறி­விப்­பார்­கள். அந்த தலைப்­பினை ஒட்­டியே போட்­டி­யா­ளர்­கள் ஐந்து நிமி­டங்­க­ளுக்­கு­ மி­கா­மல் தமி­ழில் பேசி­ட­வேண்­டும். மாநி­லம் முழு­தும் உள்ள சட்ட கல்­லூ­ரி­களை ஆறு மண்­ட­லங்­க­ளாக பிரித்து, அந்­தந்த மண்­ட­லத்­தில் எந்த தேதி­யில், எந்த ஊரில் போட்­டி­கள் நடை­பெ­றும் என்­பதை கீழே இணைத்­துள்ள அட்­ட­வ­ணை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

    போட்­டி­க­ளுக்­கான பரிசு விவ­ரம். ஒவ்­வொரு மண்­ட­லத்­தி­லும் முதல் பரிசு ரூபாய் 50,000/- தங்­கப் பதக்­கம், சான்­றி­தழ், இரண்­டாம் பரிசு – ரூபாய் 25,000/- வெள்­ளிப்­ப­தக்­கம், சான்­றி­தழ், மூன்­றாம் பரிசு – ரூபாய் 15,000 / -தாமி­ரப் பதக்­கம், சான்­றி­தழ், இரண்டு ஆறு­தல் பரிசு – ரூபாய் 5,000/- வெண்­க­லப்­ப­தக்­கம், சான்­றி­தழ். வழங்­கப்­ப­டும்.

    ஒவ்­வொரு மண்­ட­லத்­தி­லும் வெற்றி பெற்ற முதல் மூன்று பரிசு பெற்­ற­வர்­க­ளுக்­கான (சட்­டக் கல்­லூரி மாண­வர்­கள் மற்­றும் இளம் வழக்­க­றி­ஞர்­கள்) “மாநில அள­வி­ லான இறு­திப் போட்டி” வரு­கிற 6.12.2023 (புதன்­கி­ழமை) அன்று நீலாங்­கரை, “ஆர்.கே.கன்­வென்­ஷன் சென்­ட­ரில்” நடை­பெ­றும்.

    மாநி­லத்­தில் உள்ள சட்­டக் கல்­லூரி முதல்­வர்­கள் தங்­கள் கல்­லூ­ரி­யி­லி­ருந்து பங்கு பெற விரும்­பும் மாண­வர்­க­ளின் பட்­டி­ய­லினை, தங்­கள் மண்­ட­லத்­தின் போட்டி நடை­பெ­றும் நாளுக்­கு­முன்­பு­கீழே குறிப்­பி­டப்­பட்­டுள்ள “பேச்­சுப் போட்டி ஒருங்­கி­ணைப்­பா­ளர்­க­ளி­டம்” ஒப்­ப­டைக்க வேண்­டு­கி­றோம். தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளால் பெயர் அளிக்க முடி­யாத மாண­வர்­கள் போட்டி நடக்­கும் இடத்­தில் நேர­டி­யாக உரிய அடை­யாள அட்டை அல்­லது கல்­லூரி முதல்­வ­ரின் அனு­மதி கடி­தத்­து­டன் கலந்து கொள்­ள­லாம்.

    இறு­திப் போட்­டி­யில் கலந்து கொண்டு வெற்றி பெறும் சட்­டக் கல்­லூரி மாண­வர்­கள் மற்­றும் வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு முதல் பரிசு – ரூபாய் 1,00,000/- தங்­க­ப­தக்­கம், சான்­றி­தழ், இரண்­டாம் பரிசு – ரூபாய் 50,000/- வெள்­ளிப்­ப­தக்­கம், சான்­றி­தழ், மூன்­றாம் பரிசு – ரூபாய் 30,000/- தாமி­ரப்­ப­தக்­கம், சான்­றி­தழ், இரண்டு ஆறு­தல்பரிசு – ரூபாய் 10,000/= வெண்க­லப்­ப­தக்­கம், சான்­றி­தழ்.

    பேச்­சுப் போட்டி ஒருங்­கி­ணைப்­பா­ளர்­கள் கே.எஸ். இர­விச்­சந்­தி­ரன் (சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் 98400-22250), ஜெ. பச்­சை­யப்­பன் – (சட்­டத் துறை துணைச் செய­லா­ளர் 98402-60178 ) கே.சந்­துரு – (சட்­டத் துறை துணைச் செய­லா­ளர் 94440-06999), கே.ஜே.சர­வ­ணன் – (தலை­மைக் கழக வழக்­க­றி­ஞர் 98410-57345)

    மண்­டல வாரி­யாக பேச்­சுப் போட்டி நடை­பெ­றும் தேதி, இடம் ஆகிய விவ­ரங்­கள்

    30.09.2023 – (மாண­வர்­கள்)

    01.10.2023 – (வழக்­க­றி­ஞர்­கள்)

    அரசு சட்­டக் கல்­லூரி, செங்­கல்­பட்டு (இடம்), டாக்­டர்.அம்­பேத்­கர் அரசு சட்­டக் கல்­லூரி, பட்­ட­றைப் பெரும்­பு­தூர், திரு­வள்­ளூர் வட்­டம் (ம) மாவட்­டம், பி.எஸ்.அப்­துர் ரஹ்­மான் பல்­க­லைக் கழ­கம், சென்னை, சவிதா பல்­க­லைக் கழ­கம், சென்னை, வேல் டெக் ரங்­க­ரா­ஜன் டாக்­டர்.சகுந்­தலா ஆர் & டி இன்ஸ்ட்­டி­யூட் ஆப் சயின்ஸ் & டெக்­னா­லஜி, சென்னை, விநா­யகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்­டே­சன், காஞ்­சி­பு­ரம் , சாய் பல்­க­லைக்­க­ழ­கம், சென்னை. டாக்­டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்­றும் ஆராய்ச்சி நிறு­வ­னம், மது­ர­வா­யல், சென்னை. பிரிஸ்ட் பல்­க­லைக்­க­ழ­கம், புதுச்­சேரி வளா­கம், புதுச்­சேரி

    07.10.2023 – (மாண­வர்­கள்)

    08.10.2023 – (வழக்­க­றி­ஞர்­கள்)

    அரசு சட்­டக் கல்­லூரி, திரு­நெல்­வேலி (இடம்)

    எஸ்.தங்­கப்­ப­ழம், சட்­டக் கல்­லூரி, தென்­காசி (தனி­யார்) , துளசி பெண்­கள் சட்­டக் கல்­லூரி, தூத்­துக்­குடி (தனி­யார்) , முகில், சட்­டக் கல்­லூரி, கன்­னி­யா­கு­மரி (தனி­யார்),

    கல­ச­லிங்­கம் அகெ­டமி ஆப் ரிசர்ச் & எஜி­கே­சன், விரு­து­ந­கர்

    14.10.2023 – (மாண­வர்­கள்)

    15.10.2023 – (வழக்­க­றி­ஞர்­கள்)

    அரசு சட்­டக் கல்­லூரி, சேலம் (இடம்)

    அரசு சட்­டக் கல்­லூரி, வேலூர் , அரசு சட்­டக் கல்­லூரி, தரு­ம­புரி , அரசு சட்­டக் கல்­லூரி, கோய­முத்­தூர், மத்­திய சட்­டக் கல்­லூரி, சேலம் (தனி­யார்), அரசு சட்­டக் கல்­லூரி, நாமக்­கல்

    கேஎம்சி சட்­டக் கல்­லூரி, திருப்­பூர் (தனி­யார்), ஈரோடு சட்­டக் கல்­லூரி, ஈரோடு (தனி­யார்), காரூண்யா பல்­க­லைக் கழ­கம், கோய­முத்­தூர்

    21.10.2023 – (மாண­வர்­கள்)

    22.10.2023 – (வழக்­க­றி­ஞர்­கள்)

    அரசு சட்­டக் கல்­லூரி, மதுரை (இடம்)

    அரசு சட்­டக் கல்­லூரி, காரைக்­குடி, அரசு சட்­டக் கல்­லூரி, இரா­ம­நா­த­பு­ரம், அரசு சட்­டக் கல்­லூரி, தேனி, பிரிஸ்ட் பல்­க­லைக்­க­ழக வளா­கம், அர­ச­னூர், சிவ­கங்கை, ஜி.டி.என். சட்­டக் கல்­லூரி, திண்­டுக்­கல் (தனி­யார்)

    28.10.2023 – (மாண­வர்­கள்)

    29.10.2023 – (வழக்­க­றி­ஞர்­கள்)

    டாக்­டர்.அம்­பேத்­கர் அரசு சட்­டக் கல்­லூரி, புதுப்­பாக்­கம்,

    செங்­கல்­பட்டு மாவட்­டம் (இடம்), அரசு சட்­டக் கல்­லூரி, விழுப்­பு­ரம்

    சரஸ்­வதி சட்­டக் கல்­லூரி, திண்­டி­வ­னம் (தனி­யார்) , பாரத் பல்­க­லைக் கழ­கம், சேலை­யூர், சென்னை.

    செட்­டி­நாடு அகெ­டமி ஆப் ரிசர்ச் & எஜி­கே­சன், கேளம்­பாக்­கம், சென்னை.

    ஹிந்­துஸ்­தான் இன்ஸ்ட்­டி­யூட் ஆப் டெக்­னா­லஜி & சயின்ஸ், சென்னை

    சத்­தி­ய­பாமா இன்ஸ்ட்­டி­யூட் ஆப் சயின்ஸ் & டெக்­னா­லஜி பல்­க­லைக்­க­ழ­கம், ஜேப்­பி­யார் நகர், சென்னை. எஸ்­ஆர்­எம் பல்­க­லைக்­க­ழ­கம், காட்­டாங்­கு­ளத்­தூர், காஞ்­சி­பு­ரம்

    வேல்ஸ் இன்ஸ்ட்­டி­யூட் ஆப் சயின்ஸ், டெக்­னா­லஜி & அட்­வான்ஸ்டு ஸ்டடிஸ் (விஸ்­டாஸ்), வேல்ஸ் பல்­க­லைக்­க­ழ­கம், சென்னை. வி.ஐ.டி. பல்­க­லைக் கழ­கம், வேலூர் (சென்னை வளா­கம்)

    தமிழ்­நாடு டாக்­டர்.அம்­பேத்­கர் சட்­டப் பல்­க­லைக்­க­ழ­கம், சென்னை.

    04.11.2023 – (மாண­வர்­கள்)

    05.11.2023 – (வழக்­க­றி­ஞர்­கள்)

    அரசு சட்­டக் கல்­லூரி, திருச்­சி­ராப்­பள்ளி (இடம்)

    அன்னை தெரசா சட்­டக் கல்­லூரி, புதுக்­கோட்டை (தனி­யார்) , சாஸ்த்ரா பல்­க­லைக்­க­ழ­கம், தஞ்­சா­வூர் , தன­லட்­சுமி சீனி­வா­சன் பல்­க­லைக் கழ­கம், திருச்­சி­ராப் பள்ளி., தமிழ்­நாடு தேசிய சட்­டப் பல்­க­லைக் கழ­கம், திருச்­சி­ராப்­பள்ளி

    இவ்­வாறு தி.மு.கழக சட்­டத் துறைச் செய­லா­ளர் என்.ஆர். இளங்கோ, எம்.பி., தெரி­வித்­துள்­ளார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments