spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’ஐ.டி.பி.ஐ வங்கியில் 650 பணியிடங்கள்..!’’ டிகிரி முடித்தோர் விண்ணபிக்கலாம்

    ’’ஐ.டி.பி.ஐ வங்கியில் 650 பணியிடங்கள்..!’’ டிகிரி முடித்தோர் விண்ணபிக்கலாம்

    இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான ஐ.டி.பி.ஐ வங்கி, நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாகும். நாடு முழுவதும் உள்ள இந்த வங்கியின் கிளைகளில் இளநிலை உதவி மேலாளர் பதவிக்கான காலிப் பணியிடங்கள் 600 காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு நடக்கும் ஆள்சேர்ப்பிற்கு ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 30.09.2023 ஆகும்.

    Junior Assistant Manager: மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 600

    கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    வயதுத் தகுதி: 31.08.2023 அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

    சம்பளம்: இந்த பணியிடங்களுக்கான பயிற்சியின் போது முதல் 5 மாதங்களுக்கு ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரூ. 15000 வழங்கப்படும்.

    பயிற்சியை முழுமையாக முடித்த பின்னர் வருடத்திற்கு ரூ. 6.14 முதல் 6.50 லட்சம் சம்பளத்தில், வங்கிகளில் பணியிடங்கள் வழங்கப்படும்.

    தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவீர்கள். ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 4 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வில் திறனறிதல் (Reasoning) – 60 வினாக்கள், கணிதம் (Quantitative Aptitude) – 40 வினாக்கள், ஆங்கிலம் (English Language) – 40 வினாக்கள், பொது அறிவு (General/ Economy/ Banking Awareness) – 60 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் தவறான வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

    ஆன்லைன் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்படும். இந்த காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், PGDBF எனும் ஓர் ஆண்டு டிப்ளமோ பயிற்சியை முடித்த பின்னர், வங்கிகளில் பணியிடங்கள் வழங்கப்படும்.

    விண்ணப்பிக்கும் முறை: இந்த பதவிகளுக்கு https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx அல்லது https://ibpsonline.ibps.in/idbisep23/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம்: SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 200, மற்றவர்களுக்கு ரூ. 1000

    விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2023

    இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Jr-Asst-Mgr-IDBI-Bank-PGDBF-2023-24.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments