spot_img
More
    முகப்புகல்வி’’ஐடிஐ மாணவர் சேர்க்கை லிஸ்ட் வெளியீடு..!’’ ஒதுக்கீட்டு ஆணையை டவுன்லோடு செய்து கொள்ளலாம்

    ’’ஐடிஐ மாணவர் சேர்க்கை லிஸ்ட் வெளியீடு..!’’ ஒதுக்கீட்டு ஆணையை டவுன்லோடு செய்து கொள்ளலாம்

    ஐடிஐ படிப்புக்கு தேர்வாகி இருக்கும் மாணவர்கள் அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தமது அசல் சான்றிதழுடன் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி சேர்க்கையினை உறுதிசெய்ய வேண்டும். இதற்கான கடைசி தேதி 12 .07.2023 ஆகும்.

    தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-2024-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இருக்கைகளின் சேர்க்கைக்கான ஒதுக்கீடு விவரங்கள் 10.07.2023 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே 04.07.2023 அன்று www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் தனது தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை மேற்குறிப்பிட்ட இணையதளத்திற்குள் சென்று Log-in செய்து அறிந்து கொள்ளலாம். அதன்பிறகு சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தமது அசல் சான்றிதழுடன் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி சேர்க்கையினை உறுதிசெய்ய வேண்டும். இதற்கான கடைசி தேதி 12 .07.2023 ஆகும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments