spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் 4,062 காலிப்பணியிடம்..!’’ ஜுலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

    ’’ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் 4,062 காலிப்பணியிடம்..!’’ ஜுலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

    நாடு முழுவதும் உள்ள ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில், பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்), ஆய்வக உதவியாளர் ஆகிய பதவிகளில், காலியாக உள்ள 4,062 பணியிடங்களுக்கு ஜூலை 31 க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி அல்லது அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி (ஆங்கில மொழி Ekalavya Model Residential School, EMRS) என்பது இந்தியாவிலுள்ள பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளித் திட்டம் ஆகும். நகரங்களைவிட்டு தொலைவில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க இந்தியாவின் பழங்குடியினர் அமைச்சகத்தால் இத்திட்டம் 1997-98 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது.

    இங்கே மாணவர்கள் கட்டாயம் தங்கிப் படிக்கவேண்டும். இப்பள்ளி ஜவஹர் நவோதயா வித்தியாலயம் போல மாணவர்களுக்கு உணவுடன் தங்குமிடமும் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான கல்வி அந்தந்த மாநில அரசின் விருப்பப்படி சி.பி.எஸ்.இ அல்லது மாநிலப் பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    இந்தியாவில் 690 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளை அமைக்க இந்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது 401 பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளது. 401 பள்ளிகள் 1,13,275 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அதில் ஆண் மாணவர் எண்ணிக்கை 56,107 மற்றும் பெண் மாணவியர் எண்ணிக்கை 57,168 ஆகும்.

    தமிழ்நாடு:

    தமிழகத்தில் விழுப்புரம், சேலம் , நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல் என ஆறு பள்ளிகள் செயல்படுகின்றன. மேலும், இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயனடைவதற்காக, 17 கோடி ரூபாயில், மத்திய அரசின் ‘ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி’, வண்டலுார் அருகே கட்டப்பட்டு உள்ளது. அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பள்ளியில் இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கி சேர்ந்து படித்து வருகின்றனர்.

    வேலைவாய்ப்பு:

    பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில், பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) ஆகிய பதவிகளில், காலியாக உள்ள 4062 பணியிடங்களுக்கு ஜூலை 31 க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி – https://emrs.tribal.gov.in/

    விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2023

    பள்ளி முதல்வர் Principal : 303

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர் PGT : 2266

    கணக்கர் Accountant : 361

    இளநிலை உதவியாளர் (தலைமையகம்) Jr. Secretariat Assistant (JSA) : 759

    ஆய்வக உதவியாளர் Lab Attendant : 373

    மொத்தம் காலிப்பணியிடம்: 4062

    கல்வித் தகுதிகள்:

    முதல்வர் : 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின் படி, இன அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. முதுநிலை பட்டப்படிப்புடன் பி.எட்., படித்திருக்க வேண்டும். 12 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். Vice Principal / PGT / TGT பணிகளில் கலவையாக இந்த அனுபவம் இருக்க வேண்டும். இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளுர் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர் PGT: – 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின் படி, இன அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஆங்கிலம், ஹிந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு, வணிகவியல் ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். PGT(RegionalLanguage) : Marathi, Odiya, Telugu , Sanskrit, Bengali Santhali ஆகிய மொழிகள் மண்டல மொழிகள் என்ற அடிப்படையில் மொழி ஆசிரியர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அத்துடன் அந்தந்த பாடத்தின் அடிப்படையில் பிஎட் முடித்திருக்க வேண்டும்.

    கணக்கர்: வணிகவியல் பட்டதாரிகள், 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி இன அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

    இளநிலை உதவியாளர் (தலைமையகம்) : 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இந்தியில் 30 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் அடிக்க தெரிந்திருக்க வேண்டும். 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி இன அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

    ஆய்வக உதவியாளர்: 12 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திட்டத்தை எடுத்து படித்திருக்க வேண்டும். அல்லது 10-ம் வகுப்பு முடித்ததுடன் லேப் டெக்னிக் குறித்து சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர் வயது 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி இன அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

    விண்ணப்பக் கட்டணம்: பள்ளி முதல்வர் பதவிக்கு, ரூ.2000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ரூ.1500, ஆசிரியர் அல்லாத இதர அனைத்து பதவிகளுக்கும் ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

    தேர்வு குறித்த முழு விபரம் அறிய https://emrs.tribal.gov.in/ என்ற அறிவிக்கையை பார்க்கவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் Online Submission of Application Form (upto 23:50 Hrs. of 31st July 2023).

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments