spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா''எளிய மக்களுக்கு தரமான கல்வி..!'' அரவிந்த் கெஜ்ரிவால்

    ”எளிய மக்களுக்கு தரமான கல்வி..!” அரவிந்த் கெஜ்ரிவால்

    சமுதாயத்தில் உள்ள எளிய மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தரமான கல்வியை வழங்கவேண்டும் என்று டெல்லி அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    “எளிய மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கல்வியில் சிறந்தவர்கள் அல்ல என்ற தவறான கருத்து பரவியுள்ளது. அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைத்தால், அவர்களால் சிறந்து விளங்கமுடியும் ” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    மேலும் டெல்லியில் அரசுப் பள்ளி ஒன்று திறக்கவுள்ளதாகவும், அதற்கு டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பெயர் சூட்டப்பட உள்ளதாகவும், அதன் மூலம் எளிய மக்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    கோ. தீபா புவனேஸ்வரி

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments