spot_img
More
    முகப்புசெய்திகள்’’உயர்த்தப்பட்டுள்ள பத்திரப்பதிவு கட்டணத்தை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்..!’’ சீமான்

    ’’உயர்த்தப்பட்டுள்ள பத்திரப்பதிவு கட்டணத்தை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்..!’’ சீமான்

    '’உயர்த்தப்பட்டுள்ள பத்திரப்பதிவு கட்டணத்தை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’’ என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

    திமுக அரசு பத்திரப்பதிவு கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ளது வன்மையான கண்டத்துக்குரியது. ஏற்கனவே அதிகரித்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பத்திரப்பதிவுக்கான கட்டணத்தையும் உயர்த்தி மக்களை வாட்டி வதைப்பதென்பது கொடுங்கோன்மையாகும்.

    திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் மின் கட்டணம், போக்குவரத்து கட்டணம்,சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தி தமிழ்நாட்டு மக்களை வாழ முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது. அக்கொடுமைகளின் நீட்சியாக தற்போது பத்திரப்பதிவு கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது மக்களை மேலும் வறுமையின் பிடியில் தள்ளவே வழிவகுக்கும்.

    பத்திரப்பதிவுக்கான ரசீது கட்டணம் 20 ரூபாயாக இருந்ததை 10 மடங்கு உயர்த்தி 200 ரூபாயாகவும், குடும்பத்திற்குள் நடைபெறும் சொத்து பகிர்வு, பாகப்பிரிவினைக்கான ஆவணப்பதிவுக்கான கட்டணத்தை ரூ 4,000 லிருந்து 10,000 ரூபாயாகவும் திமுக அரசு உயர்த்தியுள்ளதை ஏழை எளிய பாமர மக்களால் எப்படி செலுத்த முடியும்? முத்திரை தீர்வை கட்டணம் 25,000 ரூபாயை 40,000 ரூபாயாக ஒரே அடியாக உயர்த்தியுள்ளதும் ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

    ஆளும் அரசுகள் மக்களிடமிருந்து பெறுகின்ற வரியானது மலருக்கு சுமை தராமல் தேனினை உறிஞ்சும் வண்டின் செயல்பாட்டினைபோல மென்மையானதாக இருக்க வேண்டுமே தவிர, மலரினை காலில் போட்டு மிதித்து கசிக்கி பிழிந்து சாறு எடுப்பதுபோல இரக்கமற்ற வன்முறையாக இருந்திடக்கூடாது. வரி என்ற பெயரில் ஏழை மக்களின் குருதியை குடிப்பதற்கு பெயர்தான் திமுகவின் திராவிடல் மாடல் அரசின் சாதனையா?

    ஆகவே, திமுக அரசு ஏழை மக்களால் தாங்க முடியாத அளவிற்கு மிகக்கடுமையாக உயர்த்தியுள்ள பத்திரப்பதிவு கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments