திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 8 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் நெசவு நெய்யும் தொழிலாளர்களுக்கு சேலை ஒன்றுக்கு ரூ.900 மற்றும் ரூ.1000 கூலி கொடுப்பதற்கு பதிலாக ரூ.500 மற்றும் ரூ.600 கொடுப்பதாக கூறப்படுகிறது. சின்னாளபட்டிக்கு நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ’’கூட்டுறவு சங்கங்களில் கோரா பட்டு சேலைகள் தேக்கம் அடைந்திருப்பதால் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தாங்கள் நெய்யும் சேலைகளுக்கு கூலிகளை குறைத்துக் கொடுக்கின்றனர். நெசவு நெய்வதற்கு பட்டு நூல் தர மறுக்கின்றனர். இதனால் பெரும்பாலான கைத்தறி நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளனர். கடந்த முறை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் கூட்டுறவு சங்கங்களில் கோர பட்டு சேலைகளை கொள்முதல் செய்யாமல் இருந்தபோது கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தலையிட்டதால் தங்கள் பிரச்சனை தீர்ந்தது. தற்போது மீண்டும் இதே பிரச்சனை உள்ளதாக கூறினர்.
அமைச்சர் ஐ. பெரியசாமி கூறுகையில், இதனை உடனடியாக தமிழக முதல்வர் மற்றும் கைத்தறி துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சனையை தீர்ப்பதாக உறுதியளித்தார். மேலும், சின்னாளபட்டி யில் கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை தீர்ப்பதோடு கைத்தறி நெச வாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட குறையாமல் கூலி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இல்லாமல் தவிக்கும் கைத்தறி நெசவா ளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க இடங்களை தேர்வு செய்து வருகிறோம். ஒரு வருட காலத்திற்குள் சுமார் 300 கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்கும்’’ என்றார்.
அருந்ததியர் காலனிப் பகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு:
சின்னாளபட்டியில் உள்ள 18 வார்டுகளிலும், பொதுமக்கள் மற்றும் நெசவாளர்களை நேரில் சந் தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தங்கள் பகுதிக்கு தார்ச்சாலை வசதி, மற்றும் பேவர் பிளாக் கற்கள் சாலை, வசதி கேட்டு பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்று உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டதோடு நலத்திட்ட பணி களை கண்காணிக்க வேண்டுமென உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கூறினார். அருந்ததியர் காலனிப் பகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பகுதியில் உடனடியாக தார்ச் சாலை அமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர் அறி வுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஆத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன், சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பிரதிபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர் கணேசன், தலைமை எழுத்தர் கலியமூர்த்தி ராமமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

