மதுரை மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அறிக்கை:
தமிழர் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே!
உங்கள் அமைச்சகம் இந்தியை விதிகளை மீறி தமிழ்நாட்டில் திணிப்பதை முதலில் நிறுத்துங்கள்.
உங்கள் பொறுப்பில் உள்ள அலுவல் மொழி அமலாக்கம் எப்படி நடைபெறுகிறது பாருங்கள்!

அரசு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அலுவல் மொழி விதிகள் விதி எண் 5 ஐ 100 % அமலாக்கச் சொல்லி இந்தி பயன்பாட்டை வலியுறுத்துகிறது.
ஆனால் அலுவல் மொழி விதிகள் பிரிவு 1 (ii) மிகத் தெளிவாக தமிழ்நாட்டிற்கு அது பொருந்தாது என்று கூறுவதை தாண்டி 5 வது பிரிவை பேசும் கபடம் அரங்கேறுகிறது.
G.S.R 1052 – In exercise of the powers conferred by section 8, read with sub-section(4) of section 3 of the Official Languages Act, 1963 (19 of 1963), the Central Government hereby makes the following rules, namely ;
1) Short title, extent and commencement –
i) These rules may be called the Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976.
ii) They shall extend to the whole of India, except the State of Tamilnadu.
iii) They shall come into force on the date of their publication in the Official Gazette.
தமிழைக் காவு கொடுத்து விட்டு தமிழர் பிரதமர் ஆவார் என்று உங்கள் ஆசை வார்த்தைகளுக்கு தமிழை நேசிக்கிற ஒரு தமிழர் கூட ஏமாற மாட்டார்.
முதலில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கும், உங்கள் அலுவல் மொழி அமலாக்க குழுவிற்கும் ஒன்றை சொல்லுங்கள்.
“அலுவல் மொழி விதி 1 (ii) காட்டி தமிழ்நாட்டிற்குள் நுழையாதீர்கள்” என்று.
தமிழ்நாட்டில் உள்ள இந்தி அமலாக்க செல்களை கலையுங்கள்.
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., கூறியுள்ளார்.

