தமிழ்நாடு அரசு மருத்துமனைகளில் காலியாக உள்ள லேபரட்டரி டெக்னிசியன் (LABORATORY TECHNICIAN) பதவிக்கு ஆள் தேர்வு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடம்: பொதுப்பிரிவு 91, பிற்படுத்தப்பட்டோர் 76, பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் 12, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிர்மரபினர் 81, ஆதிதிராவிடர் 58, ஆதிதிராவிடர் அருந்ததியர் 10, பழங்குடியினர் 4 என மொத்தம் 332 காலிப் பணியிடம்.
பணி : LABORATORY TECHNICIAN GRADE- III ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் கிரேடு -3
சம்பளம்: இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.13,000 வீதம் ஒருங்கிணைந்த ஊதியம் (Consolidated Pay). முதல் ஆண்டு முடிவில் இரண்டாம் ஆண்டுக்கு 5 சதவிகித சம்பள உயர்வு உண்டு. இரண்டு ஆண்டு பணி முடிந்த பிறகு நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர் (Time Sale Rs. 19,500 – 62, 000).

வயது வரம்பு: அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் குறைந்தபட்ச வயது 18 ஆகும். SC / ST / SCA / BC / BCM / MBC & DNC ஆகிய பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை (அதிகபட்சம் 60 வயது-க்குள் இருக்க வேண்டும்).
பொதுப்பிரிவினரில் (OC) அனைத்து வகையினருக்கும் உச்சபட்ச வயது 32 ஆகும். பொதுப்பிரிவில், மாற்றுத்திறனாளிகளுக்கு 42, முன்னாள் ராணுவத்தினருக்கு 50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில், அதவரவற்ற விதவையினருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை. அதாவது, உச்சபட்சம் வயது என்பது 60 வயதைத் தாண்டி இருக்க கூடாது.
கல்வித்தகுதி: பிளஸ் டூ பாஸ் ஆகி இருக்க வேண்டும். அதோடு, ஓராண்டு மெடிக்கல் டெக்னாலஜி கோர்ஸ் முடித்திருக்க வேண்டும் Medical Laboratory Technology Course (one year duration). மேலும், நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: Certificate (CMLT – One year) – இந்த சான்றிதழுக்கு 50 சதவிகிதம், பிளஸ் டூ 30 சதவிகிதம், 10-ம் வகுப்பு 20 சதவிகிதம் என்று மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பத்தாரர் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு கிடையாது.
விண்ணப்பக் கட்டணம்: SC / SCA / ST / DAP(PH) / DW ஆகியோருக்கு ரூ.300. மற்றவர்களுக்கு ரூ.600.
விண்ணப்பம் பதிவு: விண்ணப்பத்தை ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். www.mrb.tn.gov.in
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 02.07.2023

