பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன் எம் .எல்.ஏ., தனது வாழ்த்து செய்தியில், “தமிழக பாஜக தலைவர் அன்பு சகோதரர் கே.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்தி இருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் மாநில தலைவரும் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழக பாஜக மாநில தலைவர் அன்பு தம்பி கே.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீண்ட ஆயுளுடன் எல்லா வளங்களும் பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்றிட எல்லாம் வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்” என்று வாழ்த்தினார்.

மூத்த தலைவர் ஹச்.ராஜா, “தமிழக பாஜக தலைவர் சகோதரர் அண்ணாமலை Ex.IPS அவர்களின் பிறந்த நாளில் நீண்ட ஆயுளோடும் ஆரோக்யத்தோடும் தேசப்பணியோடு எதிரிகளையும் துவம்சம் செய்ய வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.

