spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’சுகாதார ஆய்வாளர் வேலை 1066 காலிப்பணியிடம்..!’’ ஜுலை 31 கடைசி நாள்

    ’’சுகாதார ஆய்வாளர் வேலை 1066 காலிப்பணியிடம்..!’’ ஜுலை 31 கடைசி நாள்

    ’’தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் சுகாதார ஆய்வாளர் வேலைக்கு 1,066 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜுலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    தமிழ்நாடு மருத்துவத்துறையில் 1,066 சுகாதார ஆய்வாளர் காலிப் பணி இடங்களை நிரப்பப் போவதாக தமிழ்நாடு மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு ஜுலை 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆண், பெண் என்று இருபாலாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    பணி: சுகாதார ஆய்வாளர் (Health Inspector Grade II)

    மொத்த காலிப்பணியிடம்: 1,066 (பொதுப்பிரிவு 330, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 282, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் 37, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் 213, ஆதிதிராவிடர் 160, ஆதிதிராவிடர் அருந்ததியர் 33, மலைவாழ் மக்கள் 11)

    முக்கிய தேதி: 31.07.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

    வயது வரம்பு: அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச வயது 18 ஆகும். SC / ST / SCA / BC / BCM / MBC&DNC ஆகியோருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை. முன்னேறிய வகுப்பினரில் அதிகபட்ச வயது 32 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு 42 என்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கல்வித்தகுதி:

    * 12-ம் வகுப்பு தேர்ச்சி (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்).
    * பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப்பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    * இரண்டாண்டு பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புறவு ஆய்வாளர் கல்வித்தகுதி. (இதில் இரண்டு ஆண்டு படிப்புக்கு முன்னர் இருந்த ஓராண்டு படிப்பு முடித்தவர்களும் இந்தப் பணிக்கு ததியுடையோர்தான். அவர்களும் விண்ணப்பிக்கலாம்).

    தேர்வு முறை : சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்புக்கு 50 சதவிகித மதிப்பெண். பன்னிரெண்டாம் வகுப்பு படிப்புக்கு 30 சதவிகித மதிப்பெண். பத்தாம் வகுப்பு படிப்புக்கு 20 சதவிகித மதிப்பெண். இதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்ப கட்டணம்: SC / SCA / ST / DAP(PH) Rs. 300/- Others Rs. 600

    விண்ணப்பிப்பது எப்படி?: www.mrb.tn.gov.in

    கூடுதல் தகவல்களுக்கு: MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB)
    7 th Floor, DMS Buildings, 359, Anna salai, Teynampet, Chennai – 6.
    Phone No:044-24355757 Website: www.mrb.tn.gov.in E.mail: mrb.tn.nic@gmail.com

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments