தமிழ்நாடு மருத்துவத்துறையில் 1,066 சுகாதார ஆய்வாளர் காலிப் பணி இடங்களை நிரப்பப் போவதாக தமிழ்நாடு மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு ஜுலை 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆண், பெண் என்று இருபாலாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி: சுகாதார ஆய்வாளர் (Health Inspector Grade II)
மொத்த காலிப்பணியிடம்: 1,066 (பொதுப்பிரிவு 330, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 282, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் 37, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் 213, ஆதிதிராவிடர் 160, ஆதிதிராவிடர் அருந்ததியர் 33, மலைவாழ் மக்கள் 11)
முக்கிய தேதி: 31.07.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச வயது 18 ஆகும். SC / ST / SCA / BC / BCM / MBC&DNC ஆகியோருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை. முன்னேறிய வகுப்பினரில் அதிகபட்ச வயது 32 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு 42 என்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
* 12-ம் வகுப்பு தேர்ச்சி (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்).
* பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப்பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* இரண்டாண்டு பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புறவு ஆய்வாளர் கல்வித்தகுதி. (இதில் இரண்டு ஆண்டு படிப்புக்கு முன்னர் இருந்த ஓராண்டு படிப்பு முடித்தவர்களும் இந்தப் பணிக்கு ததியுடையோர்தான். அவர்களும் விண்ணப்பிக்கலாம்).
தேர்வு முறை : சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்புக்கு 50 சதவிகித மதிப்பெண். பன்னிரெண்டாம் வகுப்பு படிப்புக்கு 30 சதவிகித மதிப்பெண். பத்தாம் வகுப்பு படிப்புக்கு 20 சதவிகித மதிப்பெண். இதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: SC / SCA / ST / DAP(PH) Rs. 300/- Others Rs. 600
விண்ணப்பிப்பது எப்படி?: www.mrb.tn.gov.in
கூடுதல் தகவல்களுக்கு: MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB)
7 th Floor, DMS Buildings, 359, Anna salai, Teynampet, Chennai – 6.
Phone No:044-24355757 Website: www.mrb.tn.gov.in E.mail: mrb.tn.nic@gmail.com

