spot_img
More
    முகப்புசெய்திகள்'’நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ‘’நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து..!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ''எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!'' என்று இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். அதை முன்னிட்டு, இளையாராஜா வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பொன்னாடை அணிவித்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    இசைஞானி இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி:
    ’’காலைப் பொழுது இனிதாய் மலர – பயணங்கள் இதமாய் அமைய – மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற – துன்பங்கள் தூசியாய் மறைய – இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு ‘இசைஞானி’ இளையராஜா!
    அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி!
    அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை ‘இசைஞானி’ எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.
    இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக – உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன்.
    எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!
    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments