spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா’’சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகும், அனந்தபுரி ரயில்..!’’ அக்டோபர் 1 முதல் மாற்றம்

    ’’சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகும், அனந்தபுரி ரயில்..!’’ அக்டோபர் 1 முதல் மாற்றம்

    சென்னை – நாகர்கோவில் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் ஆங்காங்கே நிறைவு பெறுவதையொட்டி அனைத்து ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு வருகிது. தற்போது அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்டு அதன் வண்டி எண்களும், புறப்படும் நேரங்களும் மாற்றம் செய்யப்படுகிறது.

    அதன்படி 16823 என்ற எண் கொண்ட சென்னை எக்மோர் – கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தற்போது சென்னையில் இரவு 8:10 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 06:30 மணிக்கு வந்து, கொல்லத்தை பகல் 11:40 மணிக்கு சென்றடைகிறது.

    வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த ரயில் 20635 என்ற புதிய எண்ணுடன் சென்னையில் இரவு 07:50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு காலை 06:05 மணிக்கு வந்து, கொல்லத்தை பகல் 11:15 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் 16824 என்ற எண் கொண்ட கொல்லம் – சென்னை எக்மோர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தற்போது கொல்லத்தில் மாலை 03:40 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலிக்கு இரவு 08:05 மணிக்கு வந்து, சென்னையை மறுநாள் காலை 07:40 மணிக்கு சென்றடைகிறது.

    வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த ரயில் 20636 என்ற புதிய எண்ணுடன் கொல்லத்தில் மதியம் 02:50 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலிக்கு இரவு 07:05 மணிக்கு வந்து, சென்னையை மறுநாள் காலை 06:05 மணிக்கு சென்றடையும்.

    இந்த மாற்றங்கள் 01-10-2023 முதல் அமலுக்கு வருகிறது.

    – ஆ.கோமதிநாயகம் விசு

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments