spot_img
More
    முகப்புஅதிகம் வாசிக்கப்பட்டவை’’சனாதனமும் சனாதனிகளும்..!’’ முரசொலி தலையங்கம்

    ’’சனாதனமும் சனாதனிகளும்..!’’ முரசொலி தலையங்கம்

    ’’சனாதனமும் சனாதனிகளும்’’ என்ற தலைப்பில் முரசொலியில் வெளிவந்துள்ள தலையங்கம் வருமாறு: 

    சனா­த­னம் – என்­பது என்ன? வேறு­பா­டும் – பாகு­பா­டும் காட்­டு­வ­து­தான் சனா­த­னம். உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்ற பேதத்தை உரு­வாக்­கு­வது சனா­த­னம். ஜாதி­யில் மட்­டு­மல்ல ஆண் உயர்ந்­த­வன் – பெண் தாழ்ந்­த­வள் என்ற பேதத்தை உரு­வாக்­கு­வ­து­தான் சனா­த­னம்.

    சனா­த­னி­கள் – என்­ப­வர்­கள் யார்? இந்த பாகு­பாட்­டை­யும் வேற்­று­மை­யை­யும் காப்­பாற்­று­ப­வர்­கள். அவர்­க­ளது மொழி­யில் தாழ்ந்­த­வர்­க­ளாக அடை­யா­ளம் காட்­டப்­ப­டு­ப­வர்­க­ளை­யும் – பெண்­க­ளை­யும் முன்­னே­ற­வி­டா­மல் தடுப்­ப­வர்­கள்­தான் சனா­த­னி­கள். ஒட்­டு­மொத்த இந்­துப் பெண்­க­ளை­யும், பெரும்­பான்மைஇந்து ஆண்­க­ளை­யும் இழி­வு­ப­டுத்­தும் கொள்­கை­தான் சனா­த­னம். மனுஸ்­மி­ரு­தி­யின் ஒவ்­வொரு சூத்­தி­ர­மும் இத­னைத்­தான் சொல்­கி­றது.

    இத்­த­கைய சனா­த­னத்­துக்­கும் – சனா­த­னி­க­ளுக்­கும் எதி­ரான போராட்­டம் தமிழ்ச் சமூ­கத்­தில் பல்­லாண்­டு­க­ளாக நடந்து வரு­கி­றது. அதில் முத­லா­ம­வர் வான்­பு­கழ் வள்­ளு­வர். அடுத்து வரு­கி­றார் அருட்­பி­ர­காச வள்­ள­லார். இதனை அர­சி­யல் இயக்­க­மாக ஆக்­கி­ய­வர் தந்தை பெரி­யார். இது­தான் இன்­று­வரை ஒலித்­துக் கொண்டு இருக்­கி­றது.

    சங்க காலத்­தி­லேயே துளிர் விட்டு – நிலப்­பி­ர­புத்­துவ காலத்­தில் வேர் பதித்து – அன்­னி­யப் படை­யெ­டுப்­பு­க­ளால் ஆதிக்க சக்­தி­யா­கவே மாறி – கால­னி­யக் காலத்­தி­லும் அவர்­க­ளுக்கு அடி­மைச் சேவ­கம் செய்­தும் அச்­சு­றுத்­தி­யும் பணிய வைத்து – விடு­தலை பெற்ற இந்­தி­யா­வி­லும் அந்­தச் சிந்­த­னை­களைமுழுக்க முழுக்க விதைத்து சனா­த­ன­மும் – சனா­த­னி­க­ளும் தங்­க­ளது ஆட்­டத்தைநிறுத்­தா­மல் தொடர்ந்து கொண்டே இருக்­கி­றார்­கள் என்­பது உண்­மை­தான்.

    இத்­த­கைய சனா­த­னத்­தை­யும் – சனா­த­னி­க­ளை­யும் தொடக்­கக் காலத்­தில் இருந்து அம்­ப­லப்­ப­டுத்­தி­ய­தில் பெரும் பங்கு வகித்­தது திரா­விட இயக்­கம். அத­னால்­தான் திரா­விட இயக்­கத்­தின் மீது அவர்­க­ளுக்கு அடங்­காத கோபம். ‘சனா­தன – வர்­ணா­சி­ர­மத்­தில்’ மட்­டும் கை வைக்­கா­மல் இருந்­தி­ருந்­தால்மற்ற இயக்­கத்­துக்­குள் ஊடு­ரு­வி­ய­தைப் போல திரா­விட இயக்­கத்­துக்­குள்­ளும் அவர்­கள் ஊடு­ருவி இருப்­பார்­கள். இயக்­கத்­தையே அழித்­தி­ருப்­பார்­கள். சிதைத்­தி­ருப்­பார்­கள்.

    பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யா­ருக்கு ஆற­றி­வும் கடந்த பகுத்­த­றிவுஇருந்­தது. பட்­ட­றிவு இருந்­தது. அத­னால்­தான் இயக்­கத்­தின் நோக்­கத்­தைச் சரி­யாக வரை­ய­றுத்­தார். மேல் கட்­டு­மா­னத்தை மாற்­றி­னால் போதாது, அடிக்­கட்­டு­மா­னத்தை சரி­யாக உரு­வாக்க வேண்­டும் என்­றார். அவ­ரால் உரு­வாக்­கப்­பட்ட இயக்­கத்­துக்­குள் ஆரிய சக்­தி­கள் – சனா­தன சக்­தி­க­ளால் ஊடு­ருவ முடி­ய­வில்லை.

    அர­சி­யல் இயக்­கம் கண்­டா­லும், ‘ஆரிய மாயை’ உணர்ந்­த­வ­ராக பேர­றி­ஞர்அண்ணா அவர்­கள் இருந்­தார்­கள். ‘நான் மிக மிக மிக பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வன், எத்­தனை மிக மிக மிக வேண்­டு­மா­னா­லும் போட்­டுக் கொள்­ளுங்­கள்’ என்­றார் தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர். ‘ஆரி­யத்தை வீழ்த்த வந்த திரா­வி­டத்­தின் வாரி­சு­கள் நாங்­கள்’ என்று நெஞ்சு நிமிர்த்­திச் சொல்லி வரு­கி­றார் ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யின் முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள். ‘சனா­த­னத்தை எதிர்க்க முடி­யாது, ஒழிக்­கத்­தான் முடி­யும்’ என்று சொல்­லத் தொடங்கி இருக்­கி­றார் மாண்­பு­மிகு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள்.

    ‘பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும்’ என்ற வள்­ளு­வர் வாக்­கின் இன்­றைய வடி­வம்­தான் மாண்­பு­மிகு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் உரை­யா­கும். ஈரா­யி­ரம் ஆண்­டு­க­ளாக நடை­பெற்று வரும் போராட்­டத்­தின் இன்­றைய வடி­வம் இது.

    ‘ஒழித்­தல்’ என்­றால் சனா­தன எண்­ணங்­களை ஒழித்­தலே தவிர, சனா­த­னி­களை ஒழித்­தல் ஆகாது. 100 ஆண்­டு­க­ளாக இயக்­கம் நடத்­திய பெரி­யார் அவர்­கள் எந்­தக் கோவி­லை­யும் இடிக்­க­வில்லை. எந்த எதி­ரி­யை­யும் அழிக்­க­வில்லை. பெரி­யா­ரும் அண்­ணா­வும் கலை­ஞ­ரும் எழு­தி­ய­தற்­காக – பேசி­ய­தற்­காக கைது செய்­யப்­பட்டு சிறை இருந்­தி­ருக்­கி­றார்­களே தவிர வன்­மு­றை­க­ளில் அல்ல. அது திரா­விட இயக்­கத்­தின் பாணி­யும் அல்ல. கொள்கை வர­லாறு உண்டே தவிர, கொலை வர­லா­று­கள் கிடை­யாது.

    ‘அழித்­தொ­ழித்­த­லின் வர­லாறு’ சுதந்­திர இந்­தி­யா­வில் மகாத்மா காந்­தி­யில் தொடங்­கு­கி­றது. அத­னைச் செய்­தது யார்? ‘இனப்­ப­டு­கொ­லை­யின் வர­லாறு’ 2002 குஜ­ராத்­தில் நடந்­தது. அத­னைச் செய்­தது யார்? மசூ­தியை கடப்­பா­ரை­யைக் கொண்டு தகர்த்­தது யார்? குடி­யு­ரி­மைச் சட்­டத்­தின் நோக்­க­மும்,பொது சிவில் சட்­டத்­தின் நோக்­க­மும் இனச் சுத்­தி­க­ரிப்பு அல்­லா­மல் வேறென்ன?

    “சனா­த­னக் கோட்­பாட்­டைத்­தான் நான் விமர்­சித்­தேன். எது­வுமே மாறக்­­ கூடாது என்று சனா­த­னி­கள் சொல்­கி­றார்­கள். எல்­லார்க்­கும் எல்­லாம் கிடைக்க வேண்­டும் என்­பது நமது நோக்­கம்” என்று மிக­மி­கச் சரி­யாக தீர்­மா­னப் பதி­ல­ளித்து விட்­டார் கொள்கை வாரி­சான மாண்­பு­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள். இதற்கு பதி­ல­ளிக்க நினைப்­ப­வர்­கள், சனா­த­னம் என்­பது அனை­வ­ருக்­கும்பொது­வா­ன­து­தான் என்று வாதிட்­டால் வர­வேற்­க­லாம். அது அவர்­க­ளால் முடி­யாது.

    ‘சனா­த­னத்தை’ வரி­வ­ரி­யாய் உரித்து தொங்க விட்­ட­வர் அண்­ணல் அம்­பேத்­கர் அவர்­கள்.‘சமூக உரி­மைச் சட்­டங்­க­ளி­லேயே மிகக் கொடூ­ர­மான சட்­டமே மனு­தான்’ என்­ற­வர் அவர். “இந்த சதுர்­வர்ண முறையை நான் அறவே வெறுக்­கி­றேன். எனது முழு இயற்­கை­யும் அதை எதிர்த்து எழு­கி­றது. வெறும் உணர்ச்­சி­யின் அடிப்­ப­டை­யில் மட்­டும் நான் இதனை எதிர்க்­க­வில்லை. ஒரு சமூக அமைப்பு என்ற முறை­யில் சதுர்­வர்­ணம் நடை­முறை சாத்­தி­ய­மற்­றது. தீமை நிறைந்­தது. இழிந்த தோல்­வியை கண்­டது. சதுர்­வர்ண முறை என்­பது மிகக் கொடூ­ர­மான முறை­யா­கும்”என்­றார் அண்­ணல் அம்­பேத்­கர். எனவே சனா­த­னத்­துக்கு பொய் புனுகு பூசி எடுத்து வர சனா­த­னி­கள் முயற்­சிக்­கி­றார்­கள்.

    பத்­தாண்டு கால ஆட்­சி­யில் சொல்­லிக் கொள்­வ­தற்கு எந்­தச் சாத­னை­யும் செய்­யாத பா.ஜ.க., எதிர்க்­கட்­சி­கள் சொல்­லும் கருத்­து­க­ளில் இருந்து ஏதா­வது ஒரு வார்த்­தையை எடுத்து – திரித்து அதன் மூல­மாக திசை திருப்­பப் பார்க்­கி­றது. ‘சனா­த­னத்தை ஒழித்­தல்’ என்­பதை இன அழிப்பு என்று அவர்­­களாக – அவர்­க­ளது புத்­திக்கு ஏற்ப திரித்­துக் கொள்­கி­றார்­கள்.

    வோட்டு வாங்க பா.ஜ.க.விடம் சொல்­வ­தற்கு எது­வும் இல்லை. அத­னால் பொய்யை எடுத்து வரு­கி­றார்­கள். ‘பேச நா இரண்­டு­டை­யாய் போற்றி போற்றி’ என்று எழு­தி­ய­வர் பேர­றி­ஞர் அண்ணா!

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments