spot_img
More
    முகப்புUncategorized’’திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள்..!’’ அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் பேட்டி

    ’’திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள்..!’’ அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் பேட்டி

    ’’திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவிற்காக ₹16 கோடியே 60 லட்சம் செலவில் திருப்பணிகள் மிக வேகமாக நடைபெறுகிறது’’.

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் கூறியதாவது:

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இந்த மாத உண்டியல் வருவாய் ₹2 கோடியே 93 லட்சம் பணமும், 2கிலோ 100 கிராம் தங்கமும், 19 கிலோ வெள்ளியும், 424 வெளிநாட்டு கரன்சியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    மகா கும்பாபிஷேக விழாவிற்காக ₹16 கோடியே 60 லட்சம் செலவில் திருப்பணிகள் மிக வேகமாக நடைபெறுகிறது.

    ராஜகோபுர வாசல் முகப்பு மண்டபம், திருப்பணி மண்டபம், திருக்கல்யாண மண்டபம் பழமை மாறாமல் புனரமைக்கப்படும், மேலும் அங்கு உள்ள வெள்ளை கற்களால் ஆன தூண்கள் பழமை மாறாமல் சுண்ணாம்பு கலவையால் புனரமைக்கப்படுகிறது.

    இதற்காக ஆற்று மணல், பொள்ளாச்சி சுண்ணாம்பு, கடுக்காய் மற்றும் வெல்லம் கலந்த கலவை இயந்திரம் மூலம் அரைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது!!

    இது தவிர HCL நிறுவனம் சார்பில் ₹200 கோடி செலவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் பல திட்ட பணிகள் நடைபெறுகிறது!

    கோமதிநாயகம் விசு

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments