spot_img
More
    முகப்புசெய்திகள்’’ஐடிஐ மாணவர் சேர்க்கை- ஜுன் 20 கடைசி நாள்..!’’ 8, 10 ம் வகுப்பு தேர்ச்சி...

    ’’ஐடிஐ மாணவர் சேர்க்கை- ஜுன் 20 கடைசி நாள்..!’’ 8, 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்

    தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி தற்போது 20.06.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படித்தவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

    தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-2024-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் (ஐடிஐ) சேர்க்கை நடைபெற உள்ளது.

    தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு / 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.05.2023 முதல் பெறப்பட்டு வருகிறது. அதற்கான கடைசி தேதி தற்போது 20.06.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 134 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரியிலும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மின்னஞ்சல் முகவரி : onlineitiadmission@gmail.com
    அலைபேசி எண் மற்றும் whatsapp எண்: 9499055612

    வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் செய்ய உகந்த இந்த படிப்புகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு ஐடிஐ, அரசு ஒதுக்கீட்டில் தனியார் ஐடிஐ-களில் படிப்போருக்கு கல்வி கட்டணம், மாத படிப்புதவித் தொகை, லேப்டாப், இலவச சீருடை, எழுதுபொருள் என்று பல்வேறு வசதிகள் தமிழக அரசால் செய்யப்படுகின்றன. இந்த தொழில் கல்வி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments