spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்புதமிழ்நாடு அஞ்சல் துறையில் 2994 காலியிடம்..!’’ 10 ஆம் வகுப்பு படித்தோர் ஆகஸ்ட் 23-க்கு விண்ணப்பிக்கலாம்

    தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2994 காலியிடம்..!’’ 10 ஆம் வகுப்பு படித்தோர் ஆகஸ்ட் 23-க்கு விண்ணப்பிக்கலாம்

    தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் 2994 கிராம அஞ்சல் ஊழியர் காலிப் பணியிடங்களை நிரப்புகிறது. ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    அஞ்சல் துறை, தமிழ்நாடு வட்டத்தில் 2994 கிராம அஞ்சல் ஊழியர்கள் (ஜிடிஎஸ்) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களில், சென்னை நகர மண்டத்தின் கீழ், 607 பணியிடங்களில் பணிபுரிய தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அறிவிக்கப்பட்ட பதவிகளின் வகைகள் பின்வருமாறு:

    கிளை அஞ்சல் அதிகாரி -BPM

    துணை கிளை அஞ்சல் அதிகாரி / கிராம அஞ்சல் ஊழியர் – ABPM/Dak Sevak

    விண்ணப்பங்களை ஆன்லைனில் https://indiapostgdsonline.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம். இணைய தளத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 23.08.2023.

    வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி, இடஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

    10-ஆம் வகுப்பு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், உள்ளூர் மொழிகளில் அதாவது தமிழ்மொழியில் பேச எழுத தெரிந்திருக்க வேண்டும்.

    கம்யூட்டர் இயக்குவது, சைக்கிள் ஓட்டுவது போன்றவை இருப்பின் அவை விரும்பத்தக்க தகுதிகளாக எடுத்துக் கொள்ளப்படும்.

    மேலும், இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://indiapostgdsonline.gov.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடவும்.

    இத்தேர்வுக்கு 03.08.2023 to 23.08.2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை 24.08.2023 to 26.08.2023 என்ற தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம். இந்த வேலைக்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் வேலை கிடைக்கும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments