Home செய்திகள் இந்தியா ’’நாம் பேசு­வ­தை­யா­வது அவர்­கள் கேட்­கட்­டும்..!” கனிமொழி எம்பி முழக்கம்

’’நாம் பேசு­வ­தை­யா­வது அவர்­கள் கேட்­கட்­டும்..!” கனிமொழி எம்பி முழக்கம்

0
’’நாம் பேசு­வ­தை­யா­வது அவர்­கள் கேட்­கட்­டும்..!” கனிமொழி எம்பி முழக்கம்

நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மீதான விவா­தத்தை ஒளி­ப­ரப்­பு­வ­தில் ‘சன்­சத் டி.வி.’ எனப்­ப­டும் மாநிலங்­க­ளவை தொலைக்­காட்சி பார­பட்­சத்­து­டன் நடந்து கொள்­வ­தாக முதல் நாளே குற்­றச்­சாட்­டு­ உள்­ளது.

அமைச்­சர்­கள், ஆளும்­கட்சி எம்.பி.க்கள் பேசும்­போது அவர்­களை முழு­மை­ யா­கக் காட்­டும் கேமிரா, எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் பேசும்­போது, அவர்­க­ளைக் காட்­டா­மல் சபா­நா­ய­கரை காட்­டும் வகை­யில் அமைக்­கப்­ப­டு­வ­தாக புகார் எழுந்­தது.

இந்­நி­லை­யில், புதன்­கி­ழமையன்­றும் இந்த இருட்­ட­டிப்பு வேலையை சன்­சத் டி.வி. தொடர்ந்­த­தாக, காங்­கி­ரஸ், தி.மு.க. உள்­ளிட்ட கட்­சி­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன.

ஸ்மிருதி இரானி உள்­ளிட்ட பா.ஜ.க.-வினர் பேசும் போது அவ­ரையே காண்­பித்து வந்த மாநி­லங்­க­ளவை தொலைக்­காட்சி, ராகுல் காந்தி உள்­ளிட்ட எதிர்க்­கட்சி எம்.பி.க்கள் பேசும் போது அவர்­க­ளைச் சரி­யாக காண்­பிக்­க­வில்லை. மேலும் பல நிமி­டங்­கள் சபா­நா­ய­க­ரையே காண்­பித்து வந்த நிலை­யில், கனி­மொழி கரு­ணா­நிதி பேசும்­போ­தும் அவரை முழு­மை­ யா­கக் காண்­பிக்­க­வில்லை என இந்­தியா (I.N.D.I.A) கூட்­டணி கட்சி எம்.பி.க்கள் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர்.

இது­தொ­டர்­பாகஅப்­போதே கதிர் ஆனந்த், தமி­ழச்சி தங்க பாண்­டி­யன் உள்­ளிட்ட எம்.பி.க்கள் எழுந்து எதிர்ப்பு தெரி­வித்­த­னர். அதன் பின்­ன­ரும் அதே நிலைமை தொடர்ந்­த­தால் மீண்­டும் மற்ற எம்.பி.க்கள் குரல் எழுப்­பி­னர்.

அவர்­க­ளைத் தடுத்த கனி­மொழி கரு­ணா­நிதி, “பா.ஜ.க.-வின­ருக்கு நம்­மீது பயம், நமது முகத்­தைப் பார்க்க பய­மாக இருக்­கி­றது போல. நாம் பேசு­வ­தை­யா­வது அவர்­கள் கேட்­கட்­டும்” என்­றார். மேலும் மணிப்­பூர் மக்­கள் பேசு­வதை தான் அவர்­கள் கேட்­க­வில்லை நாம் பேசு­வ­தை­யா­வது கேட்­கட்­டும் என்று தெரி­வித்­தார். அதன்­பி­ற­கும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் பேசும் காட்­சி­கள் ஒளி­ப­ரப்­பா­காத நிலை யில் அனைத்து எதிர்க்­கட்­சி­க­ளும் கடு­மை­யான எதிர்ப்பு தெரி­வித்­த­னர். தேசிய மாநாட்­டுக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பரூக் அப்­துல்­லா­வின் உரை­யின் போதும், சபா­நா­ய­கர் நாற்­கா­லி­யில் இருந்த ரமா தேவி­யின் மீதே கேமி­ராக்­கள் குவிந்­தன.

இந்­நி­லை­யில், மக்­க­ள­வை­யில் நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்­தின் மீது ராகுல் காந்தி புதன்­கி­ழமை ஆற்­றிய உரை­யில் 40 சத­வி­கி­தம் மட்­டுமே சன்­சத் தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப்­பப்­பட்­டது என்று காங்­கி­ரஸ் தரப்­பில் குற்­றம்­ சாட்­டப்பட்­டுள்­ளது. இது­கு­றித்து காங்­கி­ரஸ் பொதுச் செய­லா­ளர் ஜெய்­ராம் ரமேஷ் கூறு கையில், ‘மக்­க­ள­வை­யில் ராகுல் காந்தி 37 நிமி­டங்­கள் பேசி­னார். ஆனால், 17 நிமி­டங்­கள் 37 விநா­டி­கள் மட்­டுமே அவ­ரு­டைய பேச்சு ‘சன்­சத் தொலைக்­காட்­சி’­யில் ஒளி பரப்­பப்­பட்­டது. மேலும், மணிப்­பூர் விவ­கா­ரம் குறித்து அவர் பேசும் ம்போது, சன்­சத் தொலைக்­காட்சி கேமிரா ராகுல் காந்­தியை காண்­பிக்­கா­மல், 71 சத­வி­கித நேரம் அவைத் தலை­வ­ரையே காண்­பித்து க்கொண்­டி­ருந்­தது. ராகுல் மீதான பிர­த­மர் மோடி­யின் அச்­சத்­தையே இது வெளிப்­ப­டுத்­து­கி­றது’ என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here