spot_img
More
    முகப்புசெய்திகள்’’அரசியல் உள்நோக்கமுடன் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதா..?’’ திமுக கவுன்சிலர் ஈசன் இளங்கோ கண்டனம்

    ’’அரசியல் உள்நோக்கமுடன் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதா..?’’ திமுக கவுன்சிலர் ஈசன் இளங்கோ கண்டனம்

    ’’அரசியல் உள் நோக்கங்களுக்காக ஏதோ ஒன்றை பேசுவதும் அதற்கு உரிய பதிலை கேட்க கூட முடியாமல் தொடர்ந்து வெளிநடப்பு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள அதிமுகவினர் பொறுப்புள்ள எதிர்கட்சியினராக மக்கள் பிரதிநிதிகளாக இனியாவது நடந்து கொள்ள வேண்டும்’’ ஈசன் இளங்கோ, சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பேசினார்.

    சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டம், மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சேலம் மாநகராட்சி 34-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ பேசியதாவது: 

    “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” என்ற மாபெரும் சிறப்பு திட்டம் தந்த நம் ஒப்பற்ற தலைவர் “திராவிட மாடல் நாயகர்”  முதலமைச்சர் தளபதியார்-க்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மாமன்ற உறுப்பினர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே முன்மொழிகிறேன். இதை என் வாழ்வில் கிடைத்த மாபெரும் பாக்கியம் என்பதை மகிழ்வுடன் இந்த மாமன்றத்தில் பதிவு செய்கிறேன்.

    அண்ணன் இரா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ..!

    மரம் செழிக்க வேரின் விழுதுகள் ஈரமாக இருக்க வேண்டும் என்பதற்கேற்ப கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, முதல்வர் எண்ணதிற்கு வலுசேர்க்கும் விதமாக, மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பிரிவு பணியாளர்கள் செவிலியர்கள் உதவியாளர்கள் ஆகிய உள்ளிட்ட அனைவருக்கும் சுமார் 213 பேரையும் ஊக்கப்படுத்தும் விதமாக நமது சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ மூலம் பாராட்டி பரிசு வழங்கிய அண்ணன் நம் சேலம் மாநகராட்சியின் வணக்கத்திற்குரிய மேயர் ஆ.இராமச்சந்திரன்-க்கு நன்றி.

    திடக்கழிவு மேலான்மை குறித்து பெரிய அளவில் அனைத்து மண்டல பகுதிகளிலும் பிரமாண்ட விழிப்புணர்வு பேரனிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    குப்பைகளை அதிக அளவில் தேவையற்று உருவாக்கி பொறுப்பற்ற முறையில் பொது இடங்களில் கொட்டும் வணிக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது அவர்களின் இந்த தவறான செயல்பாட்டை மாற்றும் முயற்சியாக அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அதற்கு குறியீடு செய்து சுகாதார பிரிவிற்கு உத்தரவிட வேண்டும்.

    பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்..!

    தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி முன்னிட்டு, அம்மாப்பேட்டை மண்டலத்தில் அண்ணா மருத்துவமனை வளாகத்திலும், அனைத்து மண்டலங்களிலும் தமிழ்நாடு அரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் சேலம் மாநகராட்சி இணைந்து நடத்தும் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமை நடத்த ஆவண செய்ய வேண்டும்.

    மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெரு விளக்கு கம்பங்களில் உள்ள பழைய ஒளி மங்கி ஒளிரும் எல்.இ.டி. விளக்குகளில் அதிக ஒளி பிரகாசமாக ஒளிரும் வகையில் அதில் உள்ள ஃபோகஸ் டியூனபிள் லென்ஸ்களை அவ்விளக்கில் மாற்றி அல்லது சுத்தப்படுத்திட, அதை இயக்கி பராமரிக்கும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட வேண்டும்.

    பொறுப்புள்ள எதிர்கட்சி..!

    அரசியல் உள் நோக்கங்களுக்காக ஏதோ ஒன்றை பேசுவதும் அதற்கு உரிய பதிலை கேட்க கூட முடியாமல் தொடர்ந்து வெளிநடப்பு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள அதிமுகவினர் பொறுப்புள்ள எதிர்கட்சியினராக மக்கள் பிரதிநிதிகளாக இனியாவது நடந்து கொள்ள வேண்டும்.

    மாநகராட்சி நிர்வாகம் முன் எடுக்கும் அனைத்து நல்ல திட்டங்களையும் செயல்பாடுகளளையும் முடிவுகளையும் மக்களிடம் எடுத்து சென்று அதன் நல்ல நோக்கங்களை புரிய வைத்து அதற்கு அவர்களின் பேராதரவை பெறுவோம்.

    இவ்வாறு 34-வது கோட்ட மாமன்ற உறுப்பினர்  ஈசன் இளங்கோ பேசினார்

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments