spot_img
More
    முகப்புகல்வி''வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்..!'' வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் கையெழுத்திட்டார்

    ”வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்..!” வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் கையெழுத்திட்டார்

    ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுடன் விஐடி கல்வி நிறுவனம் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. விஐடி நிறுவனரும் வேந்தருமான டாக்டர்.கோ.விசுவநாதன் சமீபத்தில் ஐரோப்பிய, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு சென்றார். அப்போது அங்குள்ள பல்கலைக்கழகங்களை பார்வையிட்டார்.

    மேலும், அந்நாட்டில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களான ஸ்டுகார்டு (ஜெர்மனி), ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஸ்வீடன் ), டப்ளின் சிட்டி பல்கலைக்கழகம் (அயர்லாந்து), லண்டன் சிட்டி பல்கலைக்கழகம் (லண்டன்) ஆகிய பல்கலைக் கழகங்களின் முக்கிய தலைமை நிர்வாகிகளை சந்தித்து விஐடி பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அதே போல் ஆராய்ச்சி, சர்வதேச கருத்தரங்கு உட்பட பல்வேறு நிகழ்வுகளை மேற்கொள்ளலாம். இந்தியாவிற்கான அயர்லாந்து நாட்டின் தூதர் அகிலேஷ் மிஸ்ராவை டப்ளின் நகரத்திலுள்ள இந்திய தூதரகத்தில் சந்தித்து உயர்கல்வி குறித்து பேசினார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments