spot_img
More
    முகப்புசெய்திகள்க்ரைம்''சிறப்பு டி.ஜி.பி-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை..!'' உடனே 'ஜாமீன்' கிடைத்தது

    ”சிறப்பு டி.ஜி.பி-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை..!” உடனே ‘ஜாமீன்’ கிடைத்தது

    பெண் எஸ்.பி.,,க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஜாமீன் கோரி மனு செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

     

    தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு டிஜிபி-யாக பதவி வகித்தவர் ராஜேஷ் தாஸ். இவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டதோடு, சிபிசிஐடி காவலர்கள் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி காவலர்கள், முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பிறகு, இருவர் மீதும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்கடந்த 2 ஆண்டு களாக வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது.

    கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விசாரணை தொடங்கியது. கிட்டத்தட்ட 139 முறை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர், முன்னாள் உள்துறைச் செயலாளர், சீருடை பணி யாளர் தேர்வாணைய டிஜிபி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் நடுவர் விசாரணை நடத்தியுள்ளதோடு, அந்த சாட்சியங்களிடம் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.

    சாட்சியங்களிடம் விசாரணை, குறுக்கு விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில் ஜூன் 16 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. ஆகியோர் ஆஜராகினர். அப்போது, சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும். ரூ.20,500 அபராதமும், முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி.,க்கு ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

    அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திய ராஜேஷ் தாஸ், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஜாமீன் கோரி மனு செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜாமீன் வழங்கினார். மேலும், வருகிற ஜூலை 17 ஆம் தேதிக்குள் மேல் முறையீடு செய்யவும் கால அவகாசம் வழங்கினார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments