spot_img
More
    முகப்புசெய்திகள்’’ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை..!’’ பிதமருக்கு நன்றி சொன்ன டாக்டர் தமிழிசை

    ’’ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை..!’’ பிதமருக்கு நன்றி சொன்ன டாக்டர் தமிழிசை

    அமெரிக்கா- ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்த பாரதப் பிரதமர் மோடிக்கு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

    இந்திய அரசின் நிதியுதவியுடன் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் என்று அறிவித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி-க்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதில் அதுவும் இந்தியாவின் மொழி என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்று நம் தமிழ் மொழிக்கு புகழாரம் சூட்டியதற்கும் மேலும் நம் தமிழ்நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விதமாக தன் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகளில் திருக்குறளின் பெருமையையும் மற்றும் தமிழ் இலக்கிய படைப்புகளின் பெருமையை எடுத்துச் சொல்வதற்கும், காசி தமிழ்ச்சங்கமம், சௌராஷ்ட்ரா தமிழ்ச்சங்கமம் போன்ற நிகழ்வுகளைப் போல தற்போது அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் என்று அறிவித்தது தாங்கள் தமிழ்மொழி மீதும்,தமிழக மக்கள் மீதும் உள்ள பற்றை எடுத்துக்காட்டுகிறது.அதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments