Home செய்திகள் ’’அரிக்கொம்பனை யானைக்கூட்டத்துடன் இணைக்க அதிகபட்ச முயற்சி..!’’ தமிழ்நாடு வனத்துறை

’’அரிக்கொம்பனை யானைக்கூட்டத்துடன் இணைக்க அதிகபட்ச முயற்சி..!’’ தமிழ்நாடு வனத்துறை

0
’’அரிக்கொம்பனை யானைக்கூட்டத்துடன் இணைக்க அதிகபட்ச முயற்சி..!’’ தமிழ்நாடு வனத்துறை

ஜூன் 5-2023 அன்று தேனியில் பிடிபட்ட அரிக்கொம்பன் என்ற காட்டு யானை கடந்த வாரங்களில் பெரும் மாற்றத்தை அடைந்துள்ளது. கடந்த காலங்களில் தனது உணவிற்காக அரிசி மற்றும் பயிர்களை சாப்பிட்டு வந்த யானையானது காட்டுப் பகுதியில் விடப்பட்ட பின்பு 20 நாட்களாக மூணாறு வனப்பகுதி போன்ற வாழ்விடம் களக்காட்டிலும் உள்ளதால் நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ள இயற்கையான உணவுகளை எடுத்துக் கொண்டும், சுதந்திரமாக உலாவியும் வருகிறது.

அரிக்கொம்பனை அருகில் உள்ள யானைக்கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். களக்காடு சூழலுக்கு ஏற்றவாறு யானையை பழக்கப்படுத்த வனத்துறை மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அரிக்கொம்பன் யானையை மேலக்கோதையார் பகுதியில் தினந்தோறும் கண்காணித்து வரும் முன்களப் பணியாளர்கள் யானை நல்ல ஆரோக்கியமாகவும், நல்ல நிலையிலும் உள்ளதாக களக்காடு சரணாலயம்ச்துணை இயக்குநர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here