spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்புதேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி ’ரிசல்ட்’ வெளியானது ’’எஸ்.எஸ்.பி. இண்டர்வியூ விபரம்’’

    தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி ’ரிசல்ட்’ வெளியானது ’’எஸ்.எஸ்.பி. இண்டர்வியூ விபரம்’’

    தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி, 2023 எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது..

    மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் கடந்த ஏப்ரல் 16 அன்று நடத்திய தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் நேவல் அகாடமி எழுத்து தேர்வு 2023- ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    தேர்ச்சி பெற்ற  விண்ணப்பதாரர்கள். தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளில் சேர்வதற்கான 151வது படிப்புக்கும், 2ம் தேதி முதல் தொடங்கும் 113வது இந்திய கடற்படை அகாடமி படிப்புக்கும்  பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகள் தேர்வு வாரியத்தின் 2024 ஜனவரி நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை  ஆணையத்தின் www.upsc.gov.in என்ற இணையதளத்திலும் காணலாம்.

    அனைத்து தேர்வர்களின் தேர்வு தற்காலிகமானதாகும்.  தேர்வில் சேருவதற்கான நிபந்தனைகளுக்கு இணங்க, “விண்ணப்பதாரர்கள் எழுத்துப்பூர்வ முடிவு அறிவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு இணையதளத்தில் www.joinindianarmy.nic.in இல் தங்களை ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு  நேர்காணலின் தேர்வு மையங்கள் மற்றும் தேதிகள் ஒதுக்கப்படும், அவை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கப்படும்.

    எஸ்.எஸ்.பி நேர்காணலின் போது விண்ணப்பதாரர்கள் வயது மற்றும் கல்வித் தகுதிக்கான அசல் சான்றிதழ்களை அந்தந்த சேவைத் தேர்வு வாரியங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இறுதி முடிவு வெளியான நாளிலிருந்து பதினைந்து (15) நாட்களுக்குள் தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல்கள் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். (SSB நேர்காணல்களை முடித்த பிறகு) முப்பது (30) நாட்களுக்குள் இணையதளத்தில் கிடைக்கும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments