spot_img
More
    முகப்புபசுமைதேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் கோடை மழை

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் கோடை மழை

    தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து 413 கன அடியாக வருவதால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது.

    தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது.

    முல்லைப் பெரியாறு அணையில் நீர் வரத்து முற்றிலும் இல்லாமல் இருந்ததால் அணையின் நீர்மட்டம் சரியத் தொடங்கியது. இதனால் தேனி மாவட்ட விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து 413 கன அடியாக வருவதால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது.

    தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20அடியாக உள்ளது.அணையிலிருந்துதமிழகப் பகுதிக்கு தற்போது திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 100 கன அடி ஆகும் அணையின் மொத்த கொள்ளளவு 1943மில்லியன்கன அடி ஆக உள்ளது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments