பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, 28.4.2023 அன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், 2023-2024 ஆம் ஆண்டுக்கான பல்வேறு துறைகளில் கட்டப்படும் கட்டடங்களின் மதிப்பீடு தயார் செய்வதற்குரிய, கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தினக்கூலி விவரம் அடங்கிய செந்தர விலை விவர பட்டியலை (Standard Schedule of Rates) வெளியிட்டார்.
இந்நிகழ்வின் போது, நிதித்துறை அரசு துணை செயலாளர் பிரதீக் தயாள், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், பொதுப்பணித்துறை சென்னை மண்டலத் தலைமை பொறியாளர் க.ஆயிரத்தரசு இராஜசேகரன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் ந.சாந்தி, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் ஆர்.சந்திரசேகர், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-2 தலைமை பொறியாளர் பி.ஆர். குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

