spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு’’குரூப் 4 காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டும்..!’’ தொல். திருமாவளவன்

    ’’குரூப் 4 காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டும்..!’’ தொல். திருமாவளவன்

    ’’குருப் 4 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்’’ என்று தொல். திருமாவளவன், தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் நான்காம் வகை பணிகளில் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்குத் தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகி, சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டுள்ளன.
    வழக்கமாக ஆண்டுதோறும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகும். கடந்த மூன்றாண்டுகள் அறிவிப்பே இல்லாத நிலையில் 30,000 பேருக்கான வாய்ப்புப்பறிபோயுள்ளது.
    இச்சூழலில், தற்போதைய அறிவிப்பு போட்டித் தேர்வு எழுதும் வேலை தேடுநர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மேலும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் கூடுதலாக அறிவிப்பு செய்யுமாறு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்’’ என்று  கூறியுள்ளார்.
    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments