spot_img
More
    முகப்புசினிமா’’கோவா சர்வதேச திரைப்பட விழா..!’’ குறும்படம், திரைப்படம் வெளியிட விண்ணப்பிக்கலாம்

    ’’கோவா சர்வதேச திரைப்பட விழா..!’’ குறும்படம், திரைப்படம் வெளியிட விண்ணப்பிக்கலாம்

    54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படம் மற்றும் குறும்படங்களை திரையிடுவதற்கான விண்ணப்பங்களை தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் வரவேற்கிறது. 

    கோவாவில் 2023, நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற உள்ள 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் திரைப்படம் மற்றும் குறும்படங்களை திரையிடுவதற்கான விண்ணப்பங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் வரவேற்கிறது.

    இந்திய பனோரமா பிரிவின் மூலம் இந்திய மாநில மொழித் திரைப்படங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியத் திரைப்பட வாரங்களில் திரையிடப்படுகிறது. இதற்கான திரைப்படத்தை 12 உறுப்பினர்களை கொண்ட நடுவர் குழுவும், குறும்படத்தை 6 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவும் தேர்ந்தெடுக்கின்றன.

    கடந்த ஆண்டுகளைப் போல, இந்தாண்டும் அதிகபட்சமாக 26 திரைப்படங்களும், 21 குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. தேசியத் திரைப்பட விருதுகள் 2023-ன் சிறந்த திரைப்படம், சிறந்த குறும்படம் ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.

    அனைத்து திரைப்படங்களும் ஆங்கில சப்டைட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 2022, ஆகஸ்ட் 30 முதல் 2023, ஜூலை 31-க்குள் தணிக்கை வாரியத்தின் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். திரைப்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2023, ஆகஸ்ட்-10 ஆகும்.

    இதுகுறித்த விவரங்களை https://www.iffigoa.org/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments