spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்புவிமானப்படையில் அக்னிவீரர் தேர்வு - ஆகஸ்ட் 17 கடைசி நாள்

    விமானப்படையில் அக்னிவீரர் தேர்வு – ஆகஸ்ட் 17 கடைசி நாள்

    இந்திய விமானப்படையில் அக்னிவீரர் தேர்வுக்கு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 12 ஆம் வகுப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 17 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 

    இந்­திய விமா­னப்­ப­டை­ யில் அக்­னி­வீர்­ வாயு பத­வி­க­ளுக்கு சேர்­வ­தற்­கான வயது வரம்பு 27.06.2003 முதல் 27.12.2006 வரை­யி­லான காலத்­தில் பிறந்­த­வ­ரா­க­வும் இருக்க வேண்­டும். கல்வி தகு­தி­யாக கணி­தம், இயற்­பி­யல் மற்­றும் ஆங்­கி­லத்­து­டன் இடை­நிலை 10, +12 சம­மான தேர்­வில் குறைந்­த­பட்­சம் 50% மதிப்­பெண்­கள் மற்­றும் ஆங்­கி­லத்­தில் 50% மதிப்­பெண்­க­ளு­டன் தேர்ச்சி பெற்­றி­ருக்க வேண்­டும் அல்­லது பொறி­யி­யல்(மெக்­கா­னிக்­கல், எலக்ட்­ரிக்­கல், எலக்ட்­ரா­னிக்ஸ், ஆட்­டோ­மொ­பைல் கம்ப்­யூட்­டர் சயின்ஸ்) மூன்­றாண்டு டிப்­ளமோ படிப்பை முடித்­தி­ருக்க வேண்­டும்

    அல்­லது Instrumentation Technoloy, Information Technology அர­சாங்க அங்­கீ­கா­ரம் பெற்ற பாலி­டெக்­னிக் நிறு­வ­னத்­தில் இருந்து 50% மதிப்­பெண்­க­ளு­டன் மொத்­தம் 50% மதிப்­பெண்­கள் மற்­றும் டிப்­ளமோ படிப்­பில் ஆங்­கி­லத்­தில் 50% மதிப்­பெண்­க­ளு­டன் (அல்­லது டிப்­ளமோ படிப்­பில் ஆங்­கி­லம் ஒரு பாட­மாக இல்லை என்­றால் இடை­நிலை / மெட்­ரி­கு­லே­ஷன்) பெற்­றி­ருக்க வேண்­டும். உடற் தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.5 செமீ ஆண்களுக்கும் 152 செமீ பெண்களுக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆர்­வ­மும் தகு­தி­யும் உள்­ள­வர்­கள் http://agnipathvayu.cdac.in என்ற இணை­ய­த­ளத்­தி­லும் வெளி­யி­டப்­பட்­டுள்ள விளம்­பர அறி­விப்­பைப் பார்த்து, தேர்வு முறை, தேர்­வுக்கு வேண்­டிய ஆவ­ணங்­கள் உட்­பட அனைத்து விவ­ரங்­க­ளை­யும் அறிந்து தகு­தி­யு­டை­ய­வர்­கள் உட­ன­டி­யாக விண்­ணப்­பிக்­க­வும்.

    மேலும் விப­ரங்­க­ளுக்கு 044-24615160 என்ற மாவட்ட வேலை­வாய்ப்பு அலு­வ­லக தொலை­பேசி எண்­ணில் தொடர்பு கொண்டு, விவ­ரங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். மேலும், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவககத்தை தொடர்பு கொண்டு தேவைப்படும் கூடுதல் தகவல்களைக் கேட்கலாம். இப்பதவிகளுக்கு ஆகஸ்ட் 17 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments