spot_img
More
    முகப்புசெய்திகள்’’ரேஷன் கடைகளில் கேழ்வரகு, சோளம், கம்பு, திணை..!’’ தமிழ்நாடு பாஜக

    ’’ரேஷன் கடைகளில் கேழ்வரகு, சோளம், கம்பு, திணை..!’’ தமிழ்நாடு பாஜக

    ’’சிறுதானியங்களான கேழ்வரகு, சோளம், கம்பு, திணை ஆகியவற்றை விளைவிக்க ஊக்குவிப்பதோடு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தமிழ்நாடு பாஜக விவசாய அணி வலியுறுத்தியுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி விவசாயி அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

    மத்திய அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை தற்போதைய விலையிலிருந்து 7% மாக உயர்த்திருப்பதும், கேழ்வரகிற்கு இரு மடங்காக உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.3846 என அறிவித்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.மோடி அரசு,  2014-ல் பதவியேற்றபொழுது குவிண்டாலுக்கு ரூ.4000-ஆக இருந்த நிலக்கடலை தற்போது குவிண்டாலுக்கு ரூ.6337 ஆக உயர்ந்து தற்போது 59% வீதமும், பருத்தி 77% வீதமும், சிறுதானியத்திற்கு 108% வீதமும் அதிகரித்துகொடுத்து சாதனை படைத்திருக்கிறது.

    இதுபோன்று பாசிப்பயிர், பருத்தி, நிலக்கடலை, துவரம்பருப்பு, உளுந்து, சோயாபீன்ஸ், மக்காச்சோளம், கேழ்வரகு உள்ளிட்டவற்றிற்கு உயர்த்தப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதாரவிலை விவசாயிகள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை விவசாயிகளை சிறுதானியங்களை ஊக்குவிக்கும்.

    தமிழக அரசும் சிறுதானியங்களான கேழ்வரகு, சோளம், கம்பு, திணை ஆகியவற்றை
    விளைவிக்க ஊக்குவிப்பதோடு கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகளில் தட்டுப்பாடின்றி கிடைக்க ஆவண செய்ய வேண்டும். விவசாயிகள் மத்தியில் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கோடு செயல்படும் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments