spot_img
More
    முகப்புசெய்திகள்’’ரஸ்னா பாக்கெட்டும் தாத்தாவும்’’

    ’’ரஸ்னா பாக்கெட்டும் தாத்தாவும்’’

    ரஸ்னா குடித்துகொண்டிருக்கும் மாலை தாத்தாவுக்கு வயசு 93. வீட்டுல மாடு ஈனி (கன்றுக்குட்டி போட்டு) ரெண்டு நாள் ஆச்சுதாம், தாத்தாவோட ஆச்சி ஒரு ஊருக்கு போனதால தாத்தா அந்த மாட்டுல பால் கறந்துருக்கார்.

    அந்த மாடு தத்தாவ கால்ல மிதிச்சுட்டு.. அதனால சாத்தான்குளம் சர்க்கார் ஆஸ்பத்திரியில ஊசி போட்டுட்டு, மத்தியானம் பன்னிரெண்டரை மணி வெயில்ல பன்னம்பாறையில வந்து இறங்கினவரு, வீரா பிள்ளை ஒரு ரஸ்னா பாக்கெட் தாரும்ன்னு கேட்டாரு.

    வீரா பிள்ளை ரஸ்னா பாக்கெட்டை வெட்டி ஒரு ஸ்டா போட்டு கொடுக்க.., கொஞ்ச நேரம் ஸ்டா வச்சி குடித்தவர்… ச்சவம், இது நமக்கு சரி படாது என்று அண்ணாந்து குடிக்கிறார்!!

    2012 ஆம் ஆண்டு இதே தேதியில் நாம் போட்ட பதிவு என்று facebook Memories காட்டியது!!

    2008-2011 கல்லூரி படிக்கும் பொழுது விடுமுறை நாட்களில் இந்த கடையில் உட்கார்ந்து மாலை தாத்தாவுடன் அரட்டை அடிப்பது உண்டு. அவருடைய இளம் வயதில் கொழும்புவில் வேலை பார்த்த அனுபவங்களை தினமும் கூறுவார்.

    கேட்க… கேட்க… இலங்கைக்கு சென்று வந்தது போல இருக்கும்!!

    தற்போது இந்த தாத்தா நம்முடன் இல்லை. காலமாகி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் இருக்கும்.

    மிஸ் யூ தாத்தா.

     – ஆ. கோமதிநாயகம் விசு

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments