spot_img
More
    முகப்புசெய்திகள்’’முதியோர் இல்லத்தில் பிறந்தநாள்..!’’ ஆசிரியர் தருமராஜா நெகிழ்ச்சி

    ’’முதியோர் இல்லத்தில் பிறந்தநாள்..!’’ ஆசிரியர் தருமராஜா நெகிழ்ச்சி

    ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு, மாநில தலைவரும், மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியருமான D.M.தருமராஜா D, Astro அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி 24/08/2023 அன்று சென்னை பல்லாவரத்தில் இயங்கும் சாமரிட்டன் முதியோர் கருணை இல்லத்தில் நடைபெற்றது.

    அங்குள்ள முதியோர்கள் மற்றும் அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கினார் தருமராஜா. நிகழ்ச்சியில் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு, மாநில செயற்குழு உறுப்பினர் S.முரளி D, Pharm, மனிதநேயம் பத்திரிகை ஆசிரியர் ராஜேஷ், தென்சென்னை மாவட்ட ஆலோசகரும், உதவிக்கரம் பத்திரிகை உதவிய ஆசிரியர் எம்.பி.நந்தகுமார் BA ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும், தென் சென்னை மாவட்ட தலைவர் S.V.கோபிநாத் BA, திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் P.பிரகாசம் BE, செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் C.இமையரசு, அமைப்பாளர் N.யேசுகுமார், இணை பொறுப்பாளர் B.சுரேஷ், இணை அமைப்பாளர் N.கணேஷ் ராம், துணை பொறுப்பாளர் D.மோகனசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியரும் சங்க தலைவருமான தருமராஜா கூறுகையில், ‘’பிறந்தநாளை உரிய நோக்கமுடன் பயனப்படுத்த வேண்டும். இருப்போர், இல்லாதோருக்கு உதவிட வேண்டும். எனவேதான், ஆதரவற்றோர்களுக்கு உதவினோம். இந்தப் பணியை எங்கள் அமைப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் செய்து வருகிறோம். இது தொடர்ச்சியானது. இலவச மருத்துவ முகாம், ரத்த தானம், கண் அறுவை சிகிச்சை முகாம் என்று எங்களால் முடிந்த வகையில் பல்வேறு நலத்திட்டங்களை எங்கள் அமைப்பு மூலம் செய்து வருகிறோம். ஆதவரவளித்த அனைவருக்கும் நன்றி’’ என்று சொன்னார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments