spot_img
More
    முகப்புசெய்திகள்’’மீனவ கிராமங்களில் பல்நோக்கு சேவை..!’’ மாதம் ரூ.15 ஆயிரம்; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

    ’’மீனவ கிராமங்களில் பல்நோக்கு சேவை..!’’ மாதம் ரூ.15 ஆயிரம்; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

    பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ வருவாய் கிராமங்களுக்கு தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள் (Sagar Mithra ) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    விண்ணப்பங்கள் மீன் வள அறிவியல், கடல் உயிரியல், மற்றும் ஜுவாலஜி ஆகிய பிரிவுகளில் முதுநிலை / இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் கிடைக்காவிட்டால் இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், தாவரவியல், உயிர் வேதியியல், ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை/ இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

    மேற்கண்ட, ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தகவல் தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    விண்ணப்பத்தாரர் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். சென்னை மாமாவட்ட மீனவ கிராமங்கள், அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

    31.05.2023 அன்றைய தேதிப்படி வயது 35-க்குள் இருக்க வேண்டும். மற்றும் தமிழ் நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும்.

    மாதாந்திர ஊதியம் ரூ.15,000 வழங்கப்படும்.

    விருப்பமுள்ளோர் 30.06.2023 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, ”மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்:77, சூரிய நாராயணா செட்டி தெரு, இராயபுரம், சென்னை 13 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தொலைபேசி எண்கள்: 9384824245/ 9384824407

    சென்னை மாவட்டத்துக்கான அறிவிப்பு இது. இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர் ஆபிஸ் இணையளத்தை பார்த்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments