spot_img
More
    முகப்புவேலை வாய்ப்புஅரசு வேலை வாய்ப்பு''மிலிட்டரி போலீஸ் வேலை..!'' 10 ஆம் வகுப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்

    ”மிலிட்டரி போலீஸ் வேலை..!” 10 ஆம் வகுப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்

    மிலிட்டரி போலீஸ் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். அக்கினி வீரர் பிரிவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

    முப்படைகளில் ஒன்றான இந்தியன் ஆர்மியில் மிலிட்டரி போலீஸ் வேலைக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்கினி வீரர் பிரிவின் கீழ் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண் விண்ணப்பத்தாரர்கள், ராணுவ வீரர் மிலிட்டரி போலீஸ் என்ற பணிக்கு பிப்ரவரி 13 ஆம் தேதியில் இருந்து மார்ச் 22 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவிகிதத்துக்கு அதிகமான மதிப்பெண்ணுடன் பாஸ் ஆகி இருக்க வேண்டும். Light Motor Vehicle என்கிற இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள பெண்களுக்கு இந்த வேலையில் டிரைவர் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பத்தாரர் வயதானது, பதினேழரை வயது முதல் 21 – க்குள் இருக்க வேண்டும். ராணுவத்தில் பணியின் போது உயிரிழந்தோரின் மனைவியர், 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்தாரர், குறைந்தபட்சம் 162 செண்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும். ராணுவத்தில் பணியின் போது உயிரிழந்தோரின் மனைவியர், விளையாட்டு வீரர்களுக்கு உடற்கூறு நிபந்தனைகளில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி மாணவர்களுக்கு போனஸ் மதிபெண்கள் வழங்கப்படுகிறது.

    எழுத்துத் தேர்வில், General Knowledge, General Science, Maths , Logical Reasoning ஆகிய பாடங்களில் இருந்து கொள்குறி வகையிலான கேள்விகள் கேட்க்கப்படும். எழுத்து தேர்வு ஆன்லைன் மூலம் ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று தொடங்குகிறது.

    தேசப்பணியில் ஈடுபட ஆர்வமும் துடிப்பும் உள்ள பெண்கள், www.joinindianarmy.nic.in ஆன்லைன் மூலம் பிப்ரவரி 13 ஆம் தேதியில் இருந்து மார்ச் 22 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    வேலைவாய்ப்பு விளம்பரம் முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்ய வேண்டும் ZRO_CHENNAI_NOTIFICATION_AGNIVEER_GD_WMP_24-25

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments