தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மின்ஆளுமை முகமை (TNeGA) மூலமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஐந்து திட்டங்களான 1) கல்வி உதவித்தொகை விண்ணப்பம் 2) உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம் 3) வங்கி கடன் மானிய விண்ணப்பம் 4) திருமண உதவித் தொகை விண்ணப்பம் 5) மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் ஆகியன இ-சேவை மையம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

