Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131
’’மதுரையில் அடிப்படை வசதி மோசம்..!’’ சு.வெங்கடேசன் எம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் வருத்தம் - Madras Murasu
spot_img
More
    முகப்புசெய்திகள்’’மதுரையில் அடிப்படை வசதி மோசம்..!’’ சு.வெங்கடேசன் எம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் வருத்தம்

    ’’மதுரையில் அடிப்படை வசதி மோசம்..!’’ சு.வெங்கடேசன் எம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் வருத்தம்

    மதுரையில் அடிப்படை வசதி மோசமாக இருக்கிறது என்று சு.வெங்கடேசன் எம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் வருத்தமுடன் தங்கள் கோரிக்கையை கலெக்டர் முன்னிலையில் தெரிவித்தனர்.

    மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஜூன் 15 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு – கண்காணிப்புக் குழு தலைவரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் தலைமை வகித்தார். இணைத் தலைவர்களான விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    இக்கூட்டத்தில் சு. வெங்கடேசன் எம்.பி., பேசியதாவது:

    மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளில் மீதமுள்ள தொகையினை மாநகராட்சி பள்ளிகள் மேம்பாட்டிற்கு கொடுத்திருக்க வேண்டும். அதை ஏன் பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகத்திற்கு குளிர்சாதனப்பெட்டி அமைப்பதற்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து யாரிடம் கேட்கப்பட்டது. எதன் அடிப்படையில் நீங்கள் அந்த பணியினை செய்தீர்கள் என்பதை எனக்கு எழுத்து மூலம் விளக்கம் அளிக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்காத ஹெச்டி எஃப்சி வங்கியில் மாநகராட்சி நிர்வாகம் ரூ.50 கோடி டெபாசிட் தொகையை செலுத்தி வைத்துள்ளது. அரசு சார்பில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதற்காக முகாம் நடத்தப் படுகிறது. அதில் பங்கேற்காத ஒரு வங்கி மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்காத ஒரு வங்கியில் அரசு பணத்தை எதற்கு டெபாசிட் செய்கிறீர்கள். அதற்கு பதிலாக மாணவர்களுக்கு அதிக அளவில் கல்வி கடன் வழங்கிய வங்கிகளில் மாநகராட்சி நிர்வாகம் அந்த பணத்தை டெபாசிட் செய்திட வேண்டும்.

    சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்கள் சந்திக்கும் முக்கிய இடமான கொட்டாம்பட்டி பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு கடந்த ஓராண்டு கால போராட்டத்திற்கு பின் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ரூ.5 கோடி மதிப்பில் திட்டத்திற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது அதற்கு தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேலூர், கொட்டாம்பட்டி பகுதிகளுக்கு ரூ.128 கோடி சிறப்பு திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கி அமைச்சர் அதை துவக்கி வைத்துள்ளார். இந்த இரண்டும் மிக முக்கியமான திட்டங்கள். இந்த இரு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை நத்தம் மேம்பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். ஆனால் இன்னும் நிறைய இடங்களில் பணிகள் சரியாக முடிக்கப்படமால் குறைபாடுகள் உள்ளது. சத்திரப்பட்டி மஞ்சம்பட்டி பகுதிக்கு இணைப்பு பாதை இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’’ என்று பேசினார்.

    விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர், ’’100 நாள் வேலை திட்டம் குறைக்கப்படுவதாக புகார்கள் வருகின்றது என்றார். இதற்கு பதிலளித்த கூடுதல் ஆட்சியர் சரவணன், 100 நாள் வேலையை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் அரசின் திட்டம். நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வின் போது பலரும் 100 நாள் வேலை திட்டத்தை அதி கப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையினை வைத்தார்கள். மதுரை மாவட்டத்தில் 100 நாள் வேலையை தினசரி ஒரு லட்சம் பேருக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம். எனவே 100 நாட்களில் அந்த இலக்கை எட்டு வோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வுக்கு போகும்போது கூட பலரும் பத்து நாட்கள் தான் வேலை கொடுக் கின்றார்கள். வாரத்தில் ஐந்து நாட்கள் தான் பணி கொடுக்கிறார்கள் என்று மக்களும் ஊராட்சி மன்ற தலைவர்களும் கூறுகிறார்கள். தினசரி ஒரு லட்சம் பேருக்கு பணி கொடுப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.

    தொடர்ந்து மாணிக் தாகூர் எம்.பி. பேசுகையில், ’’விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் மதுரை மாநகராட்சிக்கு 15 வார்டுகள் உள்ளது. இந்த 15 வார்டுகளிலுமே இன்னும் அடிப்படை வசதிகள் மேம்படவில்லை. இவை மாநகராட்சியோடு இணைக்கப்படாமல் இருந்திருந்தாலும் ஏதாவது பணிகளை செய்திருப்போம். ஆனால் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு திட்டமும் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக சாலைகள் மிக மோசமாக உள்ளது. பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற வில்லை குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடை பெறவில்லை எனவே இது போன்ற பணிகளை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக செய்து முடிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

    மேலும் அவர் பேசுகையில், புதனன்று தொடக்கப் பள்ளிகள் செயல்பட துவங்கிய நிலையில் மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி பள்ளிகளை ஆய்வு செய்தார். அப்போது ஒரு பள்ளியில் ஆய்வு செய்வது போன்று பத்தி ரிகைகளில் புகைப்படம் வெளிவந்திருந்த.து 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை இருந்தது .இன்றைக்கு அந்த நிலை இல்லை. ஆனால் மாவட்ட கல்வி அலுவலர் செல்லும் பள்ளியில் மாணவர்கள் தரையில் அமர்ந்திருப்பது போல் புகைப்படம் பத்திரிகைகளில் வந்துள்ளது. மாவட்ட பள்ளி கல்வி வளர்ச்சி நிர்வாகம் மதுரை மாவட்டத்தில் இன்னும் இதுபோன்று எத்தனை பள்ளிகள் உள்ளன என்பதை ஆய்வு செய்து அவற்றில் மாணவர்களுக்கான இருக்கைகளை உடனடியாக அமைத்துக் கொடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

    அலங்காநல்லூர் நகராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கூறுகையில், ‘’அலங்காநல்லூரில் அரசு பள்ளி அருகில் உள்ள அரசு கட்டி டம் மிகவும் சிதினமடைந்து உள்ளது. அந்த கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கினால், தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு உதவியாக இருக்கும் தனிச்சியம் அலங்காநல்லூர் சாலை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இதில் சாலை யின் இரு பகுதிகளிலும் மழைநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது.

    இதனால் சாலைகள் மீண்டும் மோசமாகலாம். எனவே உடனடியாக மழை நீர் வாய்க்கால்களை அமைத்துக் கொடுக்க வேண்டும், அரசு பெண்கள், ஆண்கள் பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே உடனடியாக காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பணிக்கு அமர்த்திட வேண்டும்’’ என்று தெரிவித்தார். மேலும் சிலர், ’தங்களுடைய பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கின்றது. எனவே தங்கள் பகுதிகளுக்கும் தூய்மை பணியாளர் மற்றும் காவலர்களை நியமிக்க வேண்டும்’ என்று கூறினர்.

    ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பால சுப்ரமணியம் பேசுகையில், ’’மதுரையில் பாதாள சாக்கடை கழிவுநீர் பல்வேறு பகுதிகளில் வெளியேறும் சூழ்நிலை ஏற்படுகிறது. குறிப்பாக முத்துப்பட்டி பகுதியில் கழிவு நீரேற்று நிலையம் உள்ளது. அது சரியாக செயல்படவில்லை. பைக்காரா பகுதியில் ஒரு ஒருங்கிணைந்த கழிவுநீரேற்று நிலையம் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை, இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சாலை வசதி அனைத்து பகுதிகளிலும் மோசமாக உள்ளது. செல்லூர் குலமங்கலம் சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமாக உள்ளது. இக்கூட்டத்திற்கு பின்பாவது விரைவில் சாலைகள் அமைக்கும் பணியினை துவங்கிட வேண்டும். அம்ருத் திட்டம் மிகவும் தாமதமாக நடைபெறுவதாக புகார்கள் வருகின்றது, எனவே அவற்றை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

    திட்டப் பணிகளில் செலவினம் போக ஏதாவது மீதத்தொகை இருந்தால், எங்களிடம் வழங்கி உள்ள கணக்கின் அடிப்படையில் சுமார் 20 கோடி ரூபாய் வரை இந்த தொகை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதை வேறு ஏதாவது பணிகளுக்கு நாம் செயல்படுத்த முடியுமா? என்பதை இக்கூட்டத்தில் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று கூறினார்.

    கூட்ட இறுதியில் மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் அதிகமாக வழங்கிய வங்கிக்கும் மாற்றுத் திறனாளிகள் முகாமை சிறப்பாக நடத்தியதற்காக மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங் கப்பட்டன. இக்கூட்டத்தில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், இந்த வருடம் மதுரை மாவட்டத்தில் 127 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கி மிகச்சிறந்த முன்மாதிரியான பணியை செய்த மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அனில், மாற்றுத்திறனாளிகளுக்கான 15 முகாம்களையும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வினையும் சிறப்பாக நடத்திய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரையும் பாராட்டினர்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments