spot_img
More
    முகப்புசெய்திகள்இந்தியா’’பேரிடர் மீட்பு நிதி, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு..!’’ மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு

    ’’பேரிடர் மீட்பு நிதி, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு..!’’ மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவு

    மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.6,194.40 கோடியை தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.

    மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.6,194.40 கோடியை தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார், கோவா, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு 2023-24 நிதியாண்டுக்கான மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.4,984.80 கோடியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சத்தீஸ்கர், மேகாலயா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு ரூ.1,209.60 கோடி 2022-23-ம் நிதியாண்டுக்கான மாநில பேரிடர் மீட்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிதி ஒதுக்கீடு மாநில அரசுகள் நடப்பு மழைக்காலத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments