spot_img
More
    முகப்புசெய்திகள்’’பார்வை மாற்றுத்திறனாளிக்கு அலுவலக உதவியாளர் வேலை..!’’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

    ’’பார்வை மாற்றுத்திறனாளிக்கு அலுவலக உதவியாளர் வேலை..!’’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

    பெரம்பலூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான செல்வி பாப்பாத்தி-க்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளராக பணியாற்றுவதற்கான பணி அணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘’பெரம்பலூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான செல்வி பாப்பாத்தி தனது குடும்பச் சூழலை விளக்கி வேலைவாய்ப்பு கேட்டு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். முதுகலை பட்டதாரியான அவருக்கு Outsourcing முறைப்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளராக பணியாற்றுவதற்கான பணி ஆணையை தலைமை செயலகத்தில் இன்று வழங்கினோம். சகோதரிக்கு என் வாழ்த்துகள்’’ என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து, பார்வை மாற்றுதிறனாளி செல்வி பாப்பாத்தி, ‘’எனது குடும்ப சூழ்நிலையை விளக்கி அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மஞு கொடுத்திருந்தான். கருணையுடன் எனது கோரிக்கையை பரிசீலித்து வேலை கொடுத்துள்ளார். முதுகலை பட்டதாரியான எனக்கு அவர் செய்துள்ள இந்த உதவி மிகப்பெரியது. வாழ்க்கை பயன். இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். அமைச்சரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் கொடுத்த வேலையை செய்வேன். அமைச்சருக்கு இதயப்பூர்வமான நன்றி’’ என்று சொன்னார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments