spot_img
More
    முகப்புசெய்திகள்’’பாஜகவின் நவீன ஊழல் கூடாரங்கள் பெயர் சூட்டும் மறியல் போராட்டம்..!’’ வாலிபர் சங்கம் அழைப்பு 

    ’’பாஜகவின் நவீன ஊழல் கூடாரங்கள் பெயர் சூட்டும் மறியல் போராட்டம்..!’’ வாலிபர் சங்கம் அழைப்பு 

    டிஒய்எப்ஐ (வாலிபர் சங்கம்) மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

    சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கை மோடி அரசின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று “டோல் கேட்” ஊழல்.

    செங்கல்பட்டு – பரனூர் டோல் கேட் அதிகமான வாகனங்கள் கடந்து செல்லும் பொதுப் பணத்தில் அமைக்கப்பட்டசாலையில் உள்ள டோல் கேட். அதன் வழியாக ஆகஸ்ட் 2019 லிருந்து ஜூன் 2020 வரையிலான காலத்தில் 1, 17, 08, 438 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. அவற்றில் 62,37,152 வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாமல் போனதாககணக்குகள் வெளியாகியுள்ளது.

    அதேபோல் ஆத்தூர் டோல் கேட்டில் 36 சதவீதம் வாகனங்களும் , கப்பலூர் டோல் கேட்டில் 25 சதவீத வாகனங்கள்இலவசமாக சென்றதாக கணக்குகள் வெளியாகியுள்ளன. ஏறக்குறைய பொதுப் பணத்தில் அமைக்கப்பட்டசாலைகளில் உள்ள அனைத்து டோல் கேட்டுகளிலும் இதுவே நடந்துள்ளது .

    தனியார் முகவர்கள் மூலம் நடைபெற்ற அந்த சுங்க வசூல் அரசாங்கத்திற்கு நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கோடிரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நாங்கள் ஊழலற்றவர்கள் என்று மார்தட்டிய மோடி தலமையிலான பாஜக அரசு நவீன ஊழலின் அடையாளமாகமாறியுள்ளது.

    இப்படி திட்டமிட்டு தொடர்ச்சியான கொள்ளையை நேரடியாக மக்களிடம் இருந்து நடத்திக் கொண்டிருந்த பாஜகஅரசு பதவி விலக வேண்டும். இது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்திட வேண்டும்.

    இதனை வலியுறுத்தி பாஜகவின் நவீன ஊழலின் கூடாரங்கள் என்னும் பெயர்களை வைக்கும் மறியல் போராட்டத்தைஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வருகிற செப்டம்பர் 1 நடத்திட உள்ளது.

    இப்போராட்டம் பரனூர் டோல்கேட் , கப்பலூர் டோல்கேட் , கோவை , கன்னியாகுமரி , திருச்சி , விழுப்புரம் ஆகியஇடங்களில் நடைபெறும். இப்போராட்டத்தில் ஊழலுக்கு எதிராக செயல்படத் துடிக்கும் அனைத்து பொது மக்களும், இளைஞர்களும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments