spot_img
More
    முகப்புசெய்திகள்படப்பை மனோகரன் மகன் திருமணம் ’’ கலைஞரும் - தமிழும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்க..!’’...

    படப்பை மனோகரன் மகன் திருமணம் ’’ கலைஞரும் – தமிழும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்க..!’’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து

    '’காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றியக்கழக செயலாளருமான அண்ணன் படப்பை ஆ.மனோகரன் - குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன் அவர்களின் புதல்வன் தம்பி ம.வெற்றிச்செல்வன் - ஜெசிக்கா ஏஞ்சலின் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் இன்று பங்கேற்றோம். கலைஞரும் - தமிழும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவரும் திமுக குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளருமான படப்பை ஆ.மனோகரன் – குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன் ஆகியோர் மகன் ம.வெற்றிசெல்வனுக்கும் சென்னை கலைஞர் கருணாநிதி நகர் எச்.ஜோஷ்வா ஐசக் (சிபிசிஎல் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் – ஒய்வு) – கிரேஸ்லின் ஐசக் (சைதை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணித ஆசியர் – ஓய்வு) ஆகியோரின் மகள் ஜோ.ஜெசிக்கா ஏஞ்சலினுக்கும் ஜுலை 19 – ஆம் தேதி பல்லாவரம் ரேடியல் சாலை நியூ லைப் செலிபிரேசன் சென்டரில் திருமணம் நடைபெற்றது.

    குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். திமுக நிர்வாகிகள் குன்றத்தூர் பகுதி மக்கள் திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், மணக்களின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சிக்காக 23.7.2023 ஞாயிறுக்கிழமை சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திமுக கொடிகள் கட்டப்பட்டு இருந்தது. தோரணங்கள் வைக்கப்பட்டிருந்தது.

    திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மணமக்களை வாழ்த்திய போட்டக்களை பதிவேற்றம் செய்துள்ளார். வாழ்த்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

    அதில், ‘’காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றியக்கழக செயலாளருமான அண்ணன் படப்பை ஆ.மனோகரன் – குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன் அவர்களின் புதல்வன் தம்பி ம.வெற்றிச்செல்வன் – ஜெசிக்கா ஏஞ்சலின் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் இன்று பங்கேற்றோம். கலைஞரும் – தமிழும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’இல்லற வாழில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் இருவரும் வாழ்க்கைப் பயணத்தில் அனைத்து வளமும் நலமும் பெற்று, வீட்டிற்கும் நாட்டிற்கும் ஒளிவிளக்காக திகழ்ந்திட வேண்டும் என எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments